Viral Soya Chaap Manufacturing Video: சோயா சங்க்ஸ் உடலுக்கு நல்லதா? அதில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளன?.!
சோயா சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மே 3, புதுடெல்லி (New Delhi): சைவம் சாப்பிடுபவர்கள் சிக்கனாக நினைத்து சாப்பிடுவது என்றால் அது சோயா தான். இந்த சோயாவை பிரியாணி, கறி, காய்கறி சாலட் என்று பல உணவுகளில் சேர்த்து சமைக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவர்.
தயாரிக்கும் முறை: சோயாவை சோயா பீன்ஸ் என்னும் பரப்பிலிருந்து தயாரிக்கின்றனர். 100 கிராம் சோயா பீன்ஸ் 20 முதல் 25 கிராம் புரதம் இருக்கிறது. ஆனால் இந்த 100 கிராம் சோயாவில் 40 முதல் 50 சதவீத அளவுக்கு புரத சத்து நிறைந்துள்ளது. இதன் புரத சக்தி பாகவை சைவ உணவை சாப்பிடுபவர்கள் இதனை அதிகமாக உணவில் எடுத்துக் கொள்கின்றனர். இதனை சாப்பிடுவதால் வேகமான வளர்ச்சிதை மாற்றம், தசை அமைப்பு மற்றும் ஆரோக்கியமான தோல், மூட்டுகள் போன்ற பல நன்மைகளை பெறலாம். இருப்பினும் இதில் பல பக்க விளைவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. Caviar Gold Plated Bike: கேவியர் நிறுவனத்தின் முதல் இ- பைக்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?.!
பக்கவிளைவுகள்: இந்த சோயாவில் பெண் ஹார்மோன் ஆன ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் உள்ளது. எனவே இதனை ஆண்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது ஆண்களின் மார்பு சதை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆண்களின் உடல் அமைப்பிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுமாம். மேலும் இதனை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுமாம்.
சோயாவின் தயாரிப்பு முறை: என்னதான் சோயா சோயா பருப்பில் இருந்து எடுத்தாலும் அதனை செய்வதற்கு மைதா மாவினை 50 முதல் 90 சதவீதம் பயன்படுத்துவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதனை அதிகமாக உட்கொள்ளும் போது உடம்பில் கொழுப்பு தங்கும் அபாயம் உள்ளது. அதேநேரம் பல வகையான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.