Wash Towels: உங்கள் துண்டை கடைசியா எப்போ துவைச்சிங்க? இந்த விஷயத்தெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!
துணி துவைப்பது அன்றாட செயல்களில் ஒன்றுதான் என்றாலும் துணிகளை சரியான முறையில் பிரித்து துவைக்க வேண்டியது அவசியம்.
அக்டோபர் 23, சென்னை (Health Tips): வீட்டில் துணி துவைப்பது என்பது பலருக்கும் மிக சிரமமான வேலையாக தான் தோன்றும். ஒரு பெரிய குடும்பத்தில் துணி துவைத்து முடிக்கவே நீண்ட நேரமாகும். அதிலும் பாதி பேர் துண்டினை துவைப்பதே இல்லை. பலர் தங்கள் துண்டுகளை பல நாட்கள் துவைக்காமல் பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். Cape Dresses: ராயல் லூக் தரும் கேப் கவுன்கள்.. இந்த தீபாவளிக்கு இப்படி வாங்குங்க.!
துண்டு துவைத்தல்: துண்டுகளில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். இதனால் அதில் பாக்டீரியா பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிர்கள் உருவாகின்றன. எனவே கட்டாயம் குளித்த பிறகு உங்களுடைய துண்டினை துவைத்து காய வைக்க வேண்டும். இல்லையெனில் இவை பல்வேறு வகையான தோல் பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும்.
மருத்துவ நிபுணர்கள் உகந்த சுகாதாரத்திற்காக துண்டினை இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது துடைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இல்லை எனில் குறைந்த பட்சம் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒரு முறையாவது துவைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.