அக்டோபர் 23, சென்னை (Fashion Tips): விழாக்காலங்களில் கவுன் அணிய விரும்பும் இளம்பெண்களின் விருப்பத் தேர்வாக உள்ளது கேப் கவுன்கள். இதில் துணி கைகளுடன் சேர்த்து உடலைச் சுற்றி வளையமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது பருமனான மற்றும் ஒல்லியான பெண்கள் இருவருக்குமே ஏற்றதாக இருக்கும். மேலும் கைகள் மட்டும் பெரிதாக இருக்கிறது என நினைப்பவர்களுக்கு இது மிக பொருத்தமான ஒன்றாக இருக்கும். அதனுடன் இதில் பல மாடல்களில் கேப் கவுகன்கள் வருகின்றன.
போட் நெக் கேப் கவுன்:
இந்த போட் நெக் கேப் கவுன்கள் ஓவல் வடிவில் கழுத்து டிசைனில் இருக்கும். கழுத்து நீளமாக உள்ளவர்களுக்கு இந்த கவுன்கள் கச்சிதமாக பொருந்தும். இது போன்றவை ஆஃபீஸ்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
ஒன் சைடு சிலீவ் கேப் கவுன்:
ஒரு புறம் சிலீவ் கேப் கவுன்கள் பார்ட்டிகளுக்கு ஏற்றவையாக இருக்கும். ஒரு கையை தவிர்த்து உடலை முழுவதுமாக கவர் செய்து கொள்கின்றது. Diwali 2024: தீபாவளி தேதி குழப்பம்.. 2024 தீபாவளி எப்போது..? முழு விவரம் உள்ளே..!
Front Slit கேப் கவுன்கள்:
இந்த டிசைனில் கேப் முழுவதுவாக கவர் செய்யாமல் கழுத்துப்பகுதியில் பிணைத்தும், மார்பகத்தின் மேல் வருவதில் மட்டும் ஸ்பிளிடாகி இருக்கும். இது ராயல் லுக்கை தரும். டிசைனர் சாரிகளிலும் இந்த கேப்கள் பயன்படுத்தலாம்.
டபுல் லேயர் கேப் கவுன்:
இது போட் நெக் டிசைனில் இருக்கும் ஆனால் இதில் இரனடு அடுக்குகளில் கேப் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் லாங் மற்றும் சார்ட் கேப்களில் இருக்கின்றன.
Unparalleled கேப் கவுன்:
இது கேப்புகள் சமமான அளவில் இல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். இது முன்புறம் ஏற்றத்துடனும், பின் புறம் அதிக இறக்கத்துடனும் இருக்கும். இது திருமணங்களில் அணிய பொருத்தமானதாகும். இது கைகள் முழுவதும் கவர் செய்து கொள்கின்றன. ஒரு புறம் ஸ்லீவ்லஸாகவும் (sleeveless) கிடைக்கின்றன.
டிசைனர் கேப் கவுன்கள்:
அணியப்போகும் கவுன்களுக்கு ஏற்ப நெட், எம்பிராயிடரி, அல்லது கிரிஸ்டல் டிசைகளில் இருக்கும். மேலும் மணிகளால் மட்டுமே கேப்கள் தயாரிக்கப்படுகின்றன. இது Celebrity லுக்கைத் தரும்.