IPL Auction 2025 Live

Benefits Of Ponnanganni Spinach:பொன்னாங்கண்ணி கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளனவா..! விவரம் இதோ..!

Ponnanganni keerai (Photo Credit: YouTube)

ஏப்ரல் 29, சென்னை (Health Tips): நம் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வது கீரை வகைகள்தான். அதில், அதிகப்படியான சத்துகள் நிறைந்துள்ளது. குறிப்பாக, இரும்புச்சத்துக்கள் உள்ளதால் இதனை தினம்தோறும் குழந்தைகளுக்கு உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அந்தவகையில், பொன்னாங்கண்ணி கீரையின் (Ponnanganni Spinach) பயன்கள் பற்றி இதில் பார்ப்போம். Dhoni Field Setup: ஃபீல்ட் செட் செய்த முன்னாள் கேப்டன் – அதிரடி ஆட்டகாரரின் விக்கெட்டை வீழ்த்த செய்த சம்பவம்..!

பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, சுண்ணாம்பு சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் (Nutrients) இதில் நிறைந்துள்ளன. இவற்றை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால், முகம் பொலிவோடு காணப்படும். மேலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை தெளிவாக இருக்கும். பொன்னாங்கண்ணி கீரையை தண்ணீரில் கழுவி அதனை சிறியதாக நறுக்கி பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வேகவைக்கவும். பின்பு, அதனை மசித்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர, அதிகளவில் போன் மற்றும் கணினியை பயன்படுத்தி வருகின்றனர், இதனால், கண்கள் பாதிப்படைந்து சிவப்பு நிறத்தில் மாறுகிறது. இதனை சரிசெய்ய பொன்னாங்கண்ணி கீரை (Alternanthera Sessilis) பொரியல், கூட்டு செய்து உண்டால் கண்சிவப்பு நீங்கி கண்பார்வை தெளிவு பெரும். பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் எடை அதிகரித்து, உடல் வலிமை அடையும். மேலும் மலச்சிக்கல், வாய் துர்நாற்றம் மற்றும் மூலநோய் குணமாக பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.