ஏப்ரல் 29, சென்னை (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (CSK Vs SRH) அணிகள் மோதின. ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. Car Fell Into The River: ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி..! 3 பேர் மாயம்..!

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ருத்ராஜ் 98 ரன்களும், மிட்செல் 52 ரன்களும் அடித்தனர். இதனையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வழக்கம் போல அதிரடியாக ஆட துவங்கினர். இந்நிலையில், துஷார் தேஷ்பாண்டே வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தை டிராவிஸ் கெட் சிக்சருக்கு பறக்கவிட்டார். அதே ஓவரின் 5-வது பந்தில், முன்னாள் கேப்டன் தோனி டீப் பாய்ன்ட் திசையில் நின்ற பீல்டர் மிட்செலை சற்று முன்னாடி வந்து நிற்க சொல்லி தோனியின் தந்திரமான ஃபீல்ட் செட்டால், டிராவிஸ் கெட் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனையடுத்து, ஐதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர், 18.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை அணி 78 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில், சிறப்பாக விளையாடி 98 ரன்கள் அடித்த கேப்டன் ருத்ராஜ் ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார்.