Benefits Of Red Banana: தொற்று நோய் கிருமிகளை அழிக்கும் செவ்வாழைப்பழம்..! விவரம் இதோ..!
ஏப்ரல் 24, சென்னை (Health Tips): வாழைப்பழங்களில் சிறப்புமிக்க பழம் எதுவென்றால் அது செவ்வாழைப்பழம் ஆகும். இதில் அதிகளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அனைத்து ஊட்டச்சத்துகளும் (Nutrients) நிறைந்துள்ளன. இதில், மற்ற வாழைப்பழங்களைவிட சுவை மிகுதியாக இருக்கும். செவ்வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம். Wife Kills Husband: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..! பரபரப்பு சம்பவம்..!
செவ்வாழைப்பழத்தை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல மாற்றங்கள் நிகழும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த தீர்வாகும். வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் தொற்று நோய் அபாயத்தை தடுக்கிறது. அனைத்து வித வாழைப்பழங்களும் செரிமான சக்தி உள்ளவையாக இருக்கின்றன. அந்தவகையில், செவ்வாழைப்பழம் நமது ஜீரணசக்திக்கு உதவுகிறது.
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, உடலில் பழம் குறைந்து ஆண்மை குறைபாடு ஏற்படும். இதற்கு தினம்தோறும் இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், நரம்புகள் பலம் பெற்று ஆண்மை தன்மை சீராகும். மேலும், குழந்தை இல்லாத தம்பதியினர், தினமும் இருவரும் ஆளுக்கொரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு, அரைக்கரண்டி தேன் பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர நல்ல பயனை அளிக்கும்.