ஏப்ரல் 24, ராமநாதபுரம் (Ramanathapuram News): ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை அருகே உள்ள கொடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே காதல் திருமணம் (Love Marriage) நடந்துள்ளது.இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீகாந்தின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்துள்ளது. Government Bus Accident: சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; பயணிகள் படுகாயம்..! ஒருவர் பலி..!

இதுபற்றி அறிந்த ஸ்ரீகாந்த் ஆத்திரமடைந்து இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், ஆர்த்தி தனது கணவரை கொல்ல கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, தேவகோட்டை அருகே இலக்கினிவயல் காட்டுப்பகுதிக்கு மதுகுடிப்பதற்காக இளையராஜாவும், ஸ்ரீகாந்தும் சென்றுள்ளனர். அப்போது தனது நண்பர்களோடு சேர்ந்து ஸ்ரீகாந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்து புதைத்துள்ளனர்.

இந்நிலையில், தனது கணவர் குடும்ப தகராறில் கோபமுற்று வெளியூர் சென்று தங்கி வேலை பார்த்து வருவதாக, கடந்த 2 ஆண்டுகளாக ஆர்த்தி கூறி வந்துள்ளார். இதற்கிடையில், காவல்துறையினருக்கு ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரித்ததில், அவரது மனைவி ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீகாந்தை கொலை செய்துள்ளது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர் ஒருவர் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.