Vaikasi Visakam 2024: முருக பக்தர்களே தயாரா? வைகாசி விசாகம் 2024..வழிபாடு முறைகள், விசேஷத்தை தெரிஞ்சிக்கோங்க.!

முருக பக்தர்களால் கோலாகலமாக சிறப்பிக்கப்படும் பண்டிகையை தெரிந்துகொண்டு, இறைவனருள் பெற லேட்டஸ்ட்லி தமிழ் உங்களை வாழ்த்துகிறது.

மே 12, சென்னை (Chennai): Vaikasi Visakam 2024 Images & Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Vaikasi Visakam 2024: சித்திரையின் கோடையின் நிறைவுகாலம் நிறைவுற்று, விரைவில் வசத்தமான வைகாசி வருகை தரும் வேளையில், வசந்தகாலத்தின் தொடக்கமாக கொண்டாடப்படும் வைகாசி விசாபெருவிழா வசந்த விழா என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்க்கடவுள் ஸ்ரீ முருகப்பெருமான் (Lord Muruga) நமது வாழ்வில் ஏற்பட்டுள்ள துன்பங்களை நீக்கி, வசந்தத்தை வாரி வழங்கும் நிகழ்வாக வைகாசி விசாகம் கொண்டாடப்படும். இந்த விசாகம் முருகனுக்கே உரித்தான விழாவாக கருதப்படுவதால், ஆறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் விசாக நாளன்று வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சிதரும் முருகனை காண ஓராயிரம் கண்களும் போதாது.

தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்ட: உலகளவில் வைகாசி விசாக நிகழ்வானது முருகனுக்கு உகந்த நாளாக உலகளவில் பக்தர்களால் சிறப்பிக்கப்படுகிறது. புராணப்படி, முருகன் அவதரித்த நாள் வைகாசி விசாகம் ஆகும். வைகாசி (Vaikasi Visakam) மாதத்தின் பௌர்ணமி, விசாக நட்சத்திர இணைவு ஏற்படும் நாளில் சிவனின் கண்களில் இருந்து முருகன் அவதரித்ததாக கூற்று உண்டு. சிவனின் மகனான முருகனின் தோற்றம், உலகில் தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்டி காப்பது ஆகும். அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மம் அதனை எப்படியேனும் காக்கும் என்ற சொல்லுக்கு உவமையாக பல அவதாரங்கள் எடுத்துள்ள இறை சக்திகள், ஒவ்வொன்றும் தனிமனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. Northern Lights Seen in Ladakh: லடாக்கில் தோன்றிய அரோரா ஒளிவிளைவு; சூரியபுயலால் வானியல் அதிசியம்.!

வைகாசி விசாகம் வரலாறு: உலகில் முருகன் குன்று இருக்கும் இடமெல்லாம் அவனிடமாக மாற்றிக்கொண்டாலும், திருச்செந்தூர் தலமே வைகாசி விசாகத்திற்கு உரிய தலமாக கூறப்படுகிறது. புராணங்களின்படி, பராசர முனியவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். குறும்புக்கார குழந்தைகள் ஆற்றில் குளிக்கச்செல்லும்போது நீரை அசுத்தமாகி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் மீன்கள், தவளைகள் என நீரில் இருந்த உயிரினங்கள் துன்புற, இந்த தகவலை அறிந்த முனிவர் ஆறு பெருமாளுக்கு சமமானது என்பதால், அதனை மரியாதையுடன் வணங்கி பாதுகாக்க வேண்டும். அசுத்தம் செய்வது தவறு என குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.

சாப விமோட்சனம் பெற்ற முனிவரின் குழந்தைகள்: அதனையும் கேட்காத குழந்தைகள் தொடர்ந்து அச்செயலை மேற்கொண்டு இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த முனிவர் ஒருகட்டத்தில் தனது குழந்தைகளை மீனாக போகுமாறு சாபம் வழங்கி இருக்கிறார். தவறை உணர்ந்த மகன்கள் சாப விமோட்சனம் கேட்க, பார்வதியின் கருணை மட்டுமே உங்களுக்கு விமோட்சனத்தை வாங்கும் என கூறி இருக்கிறார். பின் சிலகாலம் சகோதரர்கள் 6 பேரும் மீன்களாக வாழ்ந்து இருக்கின்றனர். கைலாயத்தில் பார்வதியின் ஞானப்பாலை பருகி முருகன் வளர்ந்தபோது, ஒருதுளி பால் பராசர முனிவரின் மகன்கள் மீனாக வாழ்ந்த ஆற்றில் விழா, இவர்கள் முனிவராக மீண்டும் உருப்பெற்று சிவனை பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கினர். Mango Benefits: கோடைகாலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

காட்சிதந்த முருகன்: இவர்களுடைய பூஜையினால் மகிழ்ந்துபோன ஈசன், திருச்செந்தூர் சென்று தவம் செய்ய திருக்காட்சி கிடைக்கும் என கூறியுள்ளார். பின் முனிவர்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்ய, வைகாசி விசாக நாளில் முருகன் காட்சிதந்து சிவபாதத்தை அடையும் அருளினை வழங்கினார். இதனை நினைவுகூரும் விதமாகவே திருச்செந்தூரில் வைகாசி விசாகம் 10 நாட்களாக நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தண்ணீர் தொட்டியில் மீன் பொம்மைகள் இடம்பெற்று, முருகனின் சாப விமோட்சணமும் ஆண்டாகும்.

2024 வைகாசி விசாகம்: இன்றைய நாளில் நெருப்பில் இருந்து அவதரித்த முருகனை குளிர்விக்க பக்தர்களின் பால்குட அபிஷேகம் நடைபெறும். வைகாசி விசாக விரதம் இருந்து முருகப்பெருமானை மனமுருகி வேண்டுவோருக்கு முற்பிறவி பாவ வினைகள் நீங்கும், வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும் என்பது ஐதீகம். 2024ம் ஆண்டுக்கான வைகாசி விசாகம் மே மாதம் 22ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில் சிறப்பு பூஜையுடன் முருகனை வீட்டில் விரதமிருந்து வழிபடலாம். இயன்றவர்கள் திருச்செந்தூர் உட்பட முருகனின் திருத்தலத்திற்கு சென்று முருகனின் அருளை பெறலாம். முருகனின் நட்சத்திரப்படி மே 22ம் தேதி வைகாசி விசாகமாக இந்த ஆண்டு சிறப்பிக்கப்படுகிறது.

முருகனின் பாடலை கேட்டு மெய்மறக்க:

ஒவ்வொரு இறை பக்தர்களும் தங்களின் தெய்வங்களை வணங்கி நல்வாழ்வு பெற லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்துகிறது.