மே 11, சென்னை (Health Tips): கோடைக்காலத்தில் நாம் மாம்பழம் மற்றும் மாம்பழத்தில் (Mango) தயாரிக்கப்படும் பானங்கள் என அனைத்தையும் விரும்பி வாங்குவோம். மாம்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் (Nutrients) நிறைந்துள்ளன. இருப்பினும், அதிகளவில் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. இதிலுள்ள முழுமையான பயன்கள் பற்றி இதில் பார்ப்போம்.

செரிமானத்துக்கு மிகவும் நல்லது: மாம்பழத்தில் அமிலேஸ், புரோட்டீஸ் மற்றும் லிபேஸ் போன்ற செரிமான நொதிகள் உள்ளன. இவை நம் உணவில் இருக்கும் கார்ப்ஸ், புரதங்கள் மற்றும் கொழுப்புகளை நீக்கி, செரிமான பிரச்சனைகளைக்கு தீர்வு அளிக்கிறது.

மலச்சிக்கலை தடுக்கும்: மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. மேலும், ரத்த சர்க்கரை அளவையும் சீராக்க உதவுகிறது. சிறுநீர் பையில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் மாம்பழத்திற்கு உள்ளது. இரவு தூங்க செல்வதற்கு முன் மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் பார்த்தால் மலச்சிக்கல் சரியாகும். Teenager Suicide After Losing Money: கிரெடிட் கார்டு மூலம் ரூ.1 லட்சம் மோசடி; விரக்தியில் வாலிபர் தற்கொலை..!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும். தோல் மற்றும் கண்களுக்கும் நல்ல பயன் தருகிறது.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்: மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கு உதவுகிறது: நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டுவர மாதவிடாய் சீராகும். அதே சமயத்தில் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே, அளவோடு சாப்பிடுவது மிகவும் நல்லது.