Narasimha Jayanthi 2024: விஷ்ணுவின் அவதாரத்தில் மிக முக்கியமானது நரசிம்ம அவதாரம்; முக்கியத்தும் என்ன? ஆன்மீக நெஞ்சங்களே தெரிஞ்சிக்கோங்க.!

பக்தன் பிரகலாதனை காப்பாற்றவும், மக்களை துயரில் இருந்து பாதுகாக்கவும் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் முக்கியத்துவம் பெற்றது. அதனை பற்றி விரிவாக எமது லேட்டஸ்ட்லி-யின் சிறப்பு செய்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Narasimha Jayanthi (Photo Credit: @LatestLY)

மே 19, சென்னை (Chennai): உலகில் எங்கெல்லாம் அதர்மம் ஓங்குகின்றதோ, அங்கு பக்தர்களை காத்து தர்மத்தினை நிலைநாட்ட, அரக்கர்களை வதம் செய்ய நான் அவதாரமாய் தோன்றுவேன் என்பது பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் வாக்கு. இந்து சமயத்தின் முக்கிய கடவுளான விஷ்ணு, வரலாறு மற்றும் புராணங்களின்படி மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம் (Narasimha Avatharam), வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என 10 அவதாரங்களை எடுத்து இருக்கிறார். இதில் ஒவ்வொரு அவதாரத்திற்கென தனி புராணமும், அந்த புராணத்தின்படி அவர் அதர்மத்தை அழித்து நன்னெறியை நிலைநாட்ட பாடுபடுத்தும் தெளிவாகிறது. எங்கு அதர்மம் தலைதூக்கி அநீதி செயலை கட்டவிழ்த்தாலும், அங்கு இறுதியில் தர்மம் மட்டுமே வெல்லும் என்பதை பறைசாற்ற ஒவ்வொரு அவதாரமும் உறுதிபூண்டு நிற்கும்.

பிரம்மாவை நோக்கி ரணியன் தவம்: அந்த வகையில், விஷ்ணுவின் அவதாரங்களில் நான்காவது அவதாரம் நரசிம்மர் அவதாரம். சத்யுகத்தின் போது வாழ்ந்த காசியப முனிவருக்கும் - தித்திக்கும் ரணியர்கள் என்று கூறப்படும் ரணியகசிபு - ரணியாக்சன் என்ற இரண்டு சகோதரர்கள் பிறந்துள்ளார். இவர்கள் இருவரும் அசுரர் சகோதரர்கள் ஆவார்கள். ஊடலுக்கு கூடாத அந்தி நேரத்தில் கூடிய தம்பதிக்கு அசுரரர்களாக இவர்கள் பிறந்துள்ளனர். வராக அவதாரத்திலேயே விஷ்ணுவினால் ராணியாக்சன் கொல்லப்பட்டுவிட, இதனால் ஆத்திரமடைந்த ரணியன் விஷ்ணுவை அழிக்க தன்னை பலம்பொருந்திய நபராக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் பிரம்மாவை நோக்கி தவமிருக்க, தவத்தினால் மகிழ்ந்த பிரம்மாவும் காட்சியை தந்தார்.

நான் தான் கடவுள் என மமதை: அவரிடம் தனக்கு மனிதர், விலங்கு, பறவை, இரவு, பகல், வீட்டின் உள்ளே, வெளியே என எங்கும் எந்த விதமான ஆயுதத்தாலும் மரணம் நேரக்கூடாது என புத்திசாலித்தனமாக வரத்தை கேட்டு பெற்றுக்கொண்டார். வரத்தை பெற்ற கையுடன் ரணியன் பூவுலகில் செய்யக்கூடாத அட்டகாசங்கள் அனைத்தையும் செய்கிறார். மேலும், படைத்தலின் குருவான பிரம்மனே வரம் தந்துவிட்டு காரணத்தால், தன்னை எதிர்க்க எவரும் இல்லை. நானே கடவுள். அனைவரும் என்னையே வணங்க வேண்டும். எனது மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும் என கட்டளைகள் இடுகிறார். அதற்கு அடிபணியாத விஷ்ணு பக்தர்கள் சித்ரவதைபடுத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர்.

பிரகலாதன் பிறப்பும், தந்தையின் பாதக செயலும்: இதன்பின் ரணியன் - காயது தம்பதிக்கு பிரகலாதன் மகனாக பிறந்தார். தான் பெற்ற வரத்தினால் ஈரேழு லோகத்தையும் ஆட்சி செய்து வந்த ரணியன், பிறரை போல மகனும் தன்னை வணங்க வேண்டும் என விரும்பினார். ஆனால், ரணியன் மனைவி கர்ப்பத்தின்போதே நாரத மாமுனி கருவில் இருக்கும் குழந்தையிடம் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே ஈரேழு உலகத்தின் கடவுள் என கூறிவிட்டு காரணத்தால், பிரகலாதன் பிறந்ததில் இருந்து விஷ்ணுவின் மந்திரத்தையே உச்சரித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரணியன், தனது சொந்த மகன் என்றும் பாராது அவரை கொலை செய்ய பல திட்டங்களை நிறைவேற்றியும் எள்ளளவும் பலன் இல்லை.

அவதரித்தார் நரசிம்மர்: தீயில் இட்டாலும், கடலில் தள்ளினாலும், மலையுச்சியில் இருந்து கீழே வீசினாலும் சிறுவன் பிரகலாதன் விஷ்ணுவின் மந்திரத்தை உச்சரித்தபடி மீண்டு வருவார். ஒருசமயத்தில் மகனிடம் வாதம் செய்த ரணியன், உனது விஷ்ணு எங்கே இருப்பார் என்று கேட்கிறார். ப்ரகலாதனோ எனது இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூற, இந்த தூணில் இருந்து உன் கடவுள் வருவானா? என தூணை உடைத்தார். தர்மத்தின் வாழ்வுதனை சூதே கவ்வினாலும், இறுதியில் தர்ம்மமே வெல்லும் என்ற கருத்துப்படி துணியில் இருந்து சிங்கத்தின் தலை கொண்டு, மனித உடலுடன் நரசிம்ம (நர - மனிதன், சிம்மம் - சிங்கம்) அவதாரமாக தோன்றி ரணியனுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

நரசிம்மரை அமைதியாக்கிய சிவன் - பார்வதி: ரணியன் பிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி மனிதன், விலங்கு, பறவை, ஆயுதம், வீட்டின் உள்-வெளியே என எங்கும் அவனின் மரணம் ஏற்படக்கூடாது என்பதால், மனிதன்-விலங்கு கலந்த தோற்றத்தில் அவதரித்த விஷ்ணு, வீட்டு நிலை வாசலில் அமர்ந்தவாறு தனது கூறிய நகங்கள் கொண்டு உடலை இரண்டு துண்டாக பிளந்து ரணியனை வாதம் செய்திடுவார். பின் பிரகலாதன் தனது தந்தைக்கு சொர்க்கத்தில் இடம்தருமாறு வரம்கேட்க, நரசிம்மரோ உனது முந்தைய தலைமுறை மற்றும் பிந்தைய தலைமுறைக்கு என்றும் சொர்க்கத்தில் இடம்தருகிறேன் என வரமளிப்பார். உக்கிரத்துடன் இருந்த நரசிம்மர் யாருக்கும் அமைதியாகாமல் இருக்க, சிவனின் சர்வேஸ்வர ரூபம் மற்றும் பார்வதியின் லட்சுமி தோற்றத்திற்கு பின் லட்சுமியை மகளாக பாவித்து லட்சுமி நரசிம்மராக அமைதியாகி அனைவர்க்கும் அமைதியான காட்சியை தந்தார்.

ஸ்ரீ நரசிம்மரின் தோற்றத்தை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூறும்பொருட்டு, நரசிம்மர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. நீங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறி, எதிர்காலம் சிறக்க நரசிம்மரின் பிறந்தநாளை மனதார கொண்டாடி மகிழ லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களை வாழ்த்துகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement