ஆகஸ்ட் 18, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ராம்நந்த்பூர், கோகுல் நகரில் நேற்று இரவு கிருஷ்ண ஜெயந்தி திருவிழா களைகட்டி இருந்தது. சாமி தேர் ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் மற்றும் விழா குழுவினர் தேரை அலங்கார உறுதியில் வைத்து வீதிஉலா நடத்தி இருந்தனர். அப்போது, தாழ்வாக சென்ற உயர் மின்சார கம்பியை யாரும் கவனிக்கவில்லை. இதனால் தேர் உயர் மின்னழுத்த கம்பியில் உரசியுள்ளது. இதனால் தேரில் மின்சாரம் (Chariot Hits Live Wire In Hyderabad) பாய்ந்த நிலையில், தேரில் இருந்த ஐந்து பேர் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டனர். பலர் தூக்கி வீசப்பட்டனர். இதனையடுத்து, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 65 வயதுடைய தாய்க்கு தண்டனை தருவதாக 2 முறை பாலியல் வன்கொடுமை.. 39 வயது மகன் அதிர்ச்சி செயல்.!
மின்சாரம் தாக்கி 5 பேர் பலி:
தகவல் அறிந்து நேரில் வந்த அதிகாரிகள், காயமடைந்த நபரைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, கிருஷ்ண யாதவ் (21), சுரேஷ் யாதவ் (34), ஸ்ரீகாந்த் ரெட்டி (35), ருத்ர விகாஸ் (39), ராஜேந்திர ரெட்டி (45) ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்த நிலையில், தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சரிவர இரவில் தெரியாமல் தேரை இயக்கியதால் இந்த விபத்து நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பக்தர்கள்:
BREAKING: 5 dead as Krishna Janmashtami procession chariot comes in contact with electric wires in Hyderabad
Details.https://t.co/oCziJGGt6l pic.twitter.com/vaMzfbanlh
— Vani Mehrotra (@vani_mehrotra) August 18, 2025