Ram Navmi Wishes In Tamil: ராம பக்தர்கள் கோலாகலமாக சிறப்பிக்கும் ராம நவமி வாழ்த்துச்செய்தி, கவிதை தொகுப்புகள் இதோ.!
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பரிபூரண ஆசியை பெற, ராம நவமியன்று அவரின் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரிடம் சரணடைய மனதார வேண்டிக்கொண்டால் போதும். பரிசுத்த எண்ணமும், விடாமுயற்சியும், அவரின் அனுகூலமும் கிடைத்தால் வெற்றி நிச்சயம்.
Ram Navmi 2024 Images & Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Ram Navmi: ஏப்ரல் 15, சென்னை (Chennai): உலகெங்கும் வாழும் இந்துக்களால், ஏப்ரல் 17ம் தேதி ராம நவமி பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில் ராம பக்தர்கள் பலரும் விரதம் இருந்து, ராம மந்திரங்கள் முழங்க வீட்டில் பூஜை செய்து வழிபடுவார்கள். வடமாநிலங்களில் ராம நவமிக்கு (Ram Navmi 2024) முன், 9 நாட்களில் இருந்து விரதம் இருந்து வழிபடும் முறையும் பின்பற்றப்படுகிறது. ராம நவமியன்று ஸ்ரீ ராமரை (Lord SriRam) மனதார வழிபடுவது நன்மையை உண்டாக்கும். செல்வம் பெருக வழிவகை செய்யும், துன்பங்களில் இருந்து நம்மை காத்து நன்மை அதிகரிக்கும். இந்து மத புராணங்களின்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூவுலகில், விஷ்ணுவின் அவதாரத்தில் 7வது அவதாரமாக சூரிய குலத்தில் உதித்த ஸ்ரீராமர், தனிநபரின் ஒழுக்கத்திற்கு அடையாளமாக வாழ்ந்து மறைந்துள்ளார். Ram Navmi 2024: ஸ்ரீ ராம நவமி 2024 உற்சவம்.. வழிபாடு முறைகளும், விரத நன்மைகளும்.. முழு விபரம் இதோ.!
ராம நவமி 2024: அதேபோல், தெய்வப்பலனை பெற்று அதர்மங்கள் செய்பவர் யாராயினும், அவர் பெற்ற தெய்வப்பலனால் அவர் உயரியவர் எனினும், அவரின் எண்ணத்தால் அவர் அழிவை தேடிக்கொள்வார் என்பதை உணர்த்தும் விதமாக ராமாயணம் அமைந்துள்ளது. தசரத மன்னருக்கு மகனாக பிறந்த ஸ்ரீராமர், அவரின் மனைவி சீதா தேவி, ராமரின் சகோதரர் லக்குவன், ஸ்ரீராம பக்தர் அனுமன் ஆகியோரை ஆண்டாண்டுக்கு நினைவுகூர ராமநவமி சிறப்பிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டில் ஏப்ரல் 17ம் தேதி சிறப்பிக்கப்படும் ராம நவமி, பல கோவில்களில் ராமர் பட்டாபிசேகம், ராமர் - சீதா திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வாகவும் சிறப்பிக்கப்படுகிறது. ராம நவமியன்று ஒவ்வொரு ராம பக்தரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வாட்சப், பேஸ்புக் ஸ்டேட்ஸில் பகிர்ந்து மகிழ, எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) நிறுவன, பிரத்தியேகமாக உங்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களை தொகுத்து வழங்கி இருக்கிறது.
ஸ்ரீ ராம நவமி வாழ்த்துக்கள்:
⇒ ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகி, மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும் பேராற்றல் வாய்ந்த மந்திரம் ஸ்ரீராமஜெயம்!
⇒ மன அமைதி, புறத்திலும்-அகத்திலும் நேர்மறை எண்ணம் மேலோங்க ஸ்ரீ ராம நவமி நாளில் வாழ்த்துகிறோம்!
⇒ குடும்பத்தின் ஒற்றுமை, சகோதரதத்துவ பாசம், தம்பதிகளின் நம்பிக்கை & ஒற்றுமை மேலோங்க ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்!
⇒ சீதா தேவி - ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் அருளால் உலகில் இன்பங்கள் நிலைத்திருக்கட்டும், ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்!
⇒ எது எப்படியேனும் உனக்கானது உன்னை கட்டாயம் வந்து சேரும், தேவையில்லாதது அனைத்தும் உன்னைவிட்டு விலகி ஓடும், ஸ்ரீ ராமஜெயம்!
⇒ இழந்ததை எண்ணி வருத்தப்படாதே, ஸ்ரீராமனின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை கட்டாயம் உன்னைத் தேடி வரும், ஸ்ரீராம ஜெயம்!
⇒ துன்பங்களை, துயரங்களை நீக்கி, மனஅமைதியை தரும் ஒரே சொல் ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்!
⇒ இன்பமும், மகிழ்ச்சியும் வாழ்வில் பெருகிட ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்!
ஸ்ரீ ராம நவமியை சிறப்பிக்கும் அனைத்து ராம பக்தர்களுக்கும், எமது லேட்டஸ்ட்லி நிறுவனம் சார்பில் இனிய ராம நவமி வாழ்த்துக்களை தெரிந்துகொள்கிறோம். எமது வாழ்த்து பாதிப்புகளை நீங்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்கள், ராம பக்தர்களுடன் பகிர்ந்து ஸ்ரீ ராமரின் அருளை பெற்று மகிழ்ச்சியுடன் வளமான வாழ்க்கை வாழ உங்களுடன் நானும் பிரார்த்திக்கிறேன்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)