Tamil New Year 2024 Images & Puthandu 2024 Wishes: புதிய கனவுகளை சுமக்கும் நமக்கு, புத்தாண்டின் தொடக்கம் நன்மையை வழங்கட்டும்! இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த ஆண்டில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறி வளங்களும், வளர்ச்சியும் குவிய எமது லேட்டஸ்ட்லி நிறுவனம் உங்களை மனதார வாழ்த்துகிறது.
ஏப்ரல் 14, சென்னை (Chennai): Tamil New Year 2024 Images & Puthandu Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Varusha Pirappu: "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி" என்ற பெருமையை கொண்ட தமிழ் மொழி, தன்னகத்தே பல பண்களை கொண்டது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழியின் சிறப்புகளை நினைவுகூறவும், தமிழர்களின் பாரம்பரியத்தை அக்னியின் அனுகிரகத்துடன் தொடங்கி வைக்கவும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக உலகெங்கும் வாழும் தமிழர்களால் சிறப்பிக்கப்படுகிறது.
12 தமிழ் மாதத்தில் முதல் மாதம்: சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய தமிழ் மாதங்களில், பங்குனி நிறைவுபெற்று சித்திரை தொடங்கும் முதல் நாள், சூரிய நாட்காட்டியின்படி மேஷ ராசியில் சூரிய பகவான் தோன்றுவதாக கருதப்படுகிறது. கதிரவனை முதல் தெய்வமாக வணங்கி மரியாதை செய்யும் தமிழர்கள், சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும் சிறப்பிக்கின்றனர்.
சித்திரை முதல் நாள் கொண்டாட்டங்களின் திருவிழா: பல இலட்சம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினம் குறித்து, தற்போதுவரை தமிழர்களின் வாழ்வியலுக்கு அடையாளமாய் கிடைத்த சான்றுகளின்படியும், தமிழர்கள் கடல்கடந்து பல நாடுகளுக்கு சென்றாலும் சித்திரை முதல் நாளினை ஆண்டின் முதல் நாளாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு, இலங்கை, மலேஷியா, மொரிசியஸ், பர்மா போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாட்டங்கள் களைகட்டும். இன்று காலை 07:30 மணி முதல் 08:30 மணி வரை பொங்கல் வைத்து வழிபட நல்ல நேரம் ஆகும். Puthandu Vazthukal 2024: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.. நீங்கள் விரும்பும் புத்தாண்டு வாழ்த்துக்கள் இதோ.!
நன்மை உண்டாகும்: அதேபோல, தமிழர்களின் கடவுளாக கருதப்படும் வேலவனின் திருக்கோவில்களிலும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறும். இந்த நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் புத்தாண்டை மனதார வரவேற்று, வீட்டில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி, இல்லாதோருக்கு நம்மால் இயன்ற உதவியை செய்தால் நன்மை உண்டாகும்.
புத்தாண்டை கொண்டாட ஆலோசனை: இன்றைய நாளில் நாம் நமது குடும்பத்துடன் நேரத்தினை செலவிடலாம். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து, அனைவரும் இனிய தமிழ் சொற்களுடன் உரையாடி மகிழலாம். பின் கோவிலுக்கு சென்று, தங்களின் ஊருக்கு அருகேயுள்ள சுற்றுலாத்தலம் அல்லது பொழுதுபோக்கு மையத்திற்கு அழைத்துச்சென்று மகிழலாம். புத்தாண்டின் தொடக்கம் இவ்வாண்டை திறம்பட, வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல தமிழ் மொழி பேசும் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒருகணம் மனதார இறைவனை பிரார்த்திக்கலாம்.
உங்களுக்கான புத்தாண்டு வாழ்த்துக்கள் இதோ: இந்த ஆண்டின் தொடக்கத்தை உங்களின் நண்பர்களுடன் கொண்டாட, எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தித்தளம் உங்களுக்கான வாழ்த்து செய்திகளையும், வாட்சப் ஸ்டேட்டஸ்களையும் வழங்குகிறது. அது உங்களின் பார்வைக்கு இத்துடன் புகைப்படமுகம், எழுத்துக்களாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் பயன்படுத்தி உங்களின் நண்பர்களுக்கு, துணைக்கு, பெற்றோருக்கு தங்களின் அன்பு வாழ்த்துக்களை பதிவு செய்யலாம். Puthandu Vazthukal 2024 Wishes In Tamil: உள்ளம் கவர்ந்தவருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள் – அசத்தல் கவிதையுடன் சிறந்த வாழ்த்துக்கள் இதோ.!