Tamil Puthandu Wish (Photo Credit: Pixabay)

Tamil New Year 2024 Images & Puthandu Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Varusha Pirappu: நியூ இயர் பார்ட்டி, கிளப் என்று ஜனவரி 1 அன்று என்னதான் ஆட்டம் போட்டாலும், தமிழ் புத்தாண்டு போன்று வராது. தமிழ் நாட்காட்டியின்படி (Tamil Calendar) சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக (Tamil New Year) சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில், வாழை இலையை விரித்து, பல்சுவை உணவுகளை பரிமாறி உண்ணுவோம். சக்கரை பொங்கலில் ஆரம்பித்து சாம்பார், ரசம், மோர், பொரியல், அப்பளம், பாயாசம், வாழைப்பழம் என வயிறுமுட்ட சாப்பிட்டு, அந்த நாளை சைவ தீபாவளி போன்று கொண்டாடுவோம்.

முன்பெல்லாம் அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று பலகாரம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம் (Greetings). ஆனால் இன்றைய காலத்தில் எல்லாருக்கும் வாட்ஸ் (Tamil New Year 2024 Wish Status) அப்பில் ஒரு மெசேஜ் (Messages) தான். அதும் சிலர் ஸ்டேட்டஸ் (Status) தான். அப்படிப்பட்ட உங்களுக்காகவே இங்கே புத்தாண்டு சிறப்பு கவிதைகளைப் (Quotes) பகிர்ந்துள்ளோம். இன்றைய நாளுக்கான வாழ்த்து செய்திகள் ( Images, Photos) என்பது பல இருக்கின்றன. அவற்றுள் சில:

இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் மெய்ப்பட இனிய புத்தாண்டு (Tamil Puthandu Wish 2024) வாழ்த்துக்கள்.. International Carrot Day: சர்வதேச கேரட் தினம்.. இது இல்லாம பொரியலே கிடையாது..!

Checkmark button எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

Checkmark button இந்த வருட புத்தாண்டு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவரவாழ்த்துகிறேன், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

Checkmark button நலமும் வளமும் தழைக்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

Checkmark button இன்னல்கள் நீங்கி புத்துணர்வு மேலோங்கி வளர்க, இப்புத்தாண்டில் வாழ்த்துகின்றேன்.

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

Checkmark button தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

Checkmark button கவலைகள் கரையட்டும்...

துன்பங்கள் தொலையட்டும்...

கடந்தவை அனைத்தும் மறைந்து‌ எண்ணங்கள் ஒளிரட்டும்...

வாழ்க்கை பல வண்ணங்களாக மாறட்டும்...

புன்னகை பூக்கட்டும்...

புது வருடத்தில் இல்லத்தில் இன்பம் பெருகட்டும்..

Checkmark button திங்களைப் போல் ஒளி வீசி

நலங்கள் பெருகி

முடிந்தவரை இல்லாருக்கு உதவி

வாழ்வில் என்றும் மகிழ்வுற

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Checkmark button இருளின் மடியில் உறங்கி

புது விடியலில் பிறக்கப் போகும்

புத்தாண்டே வருக

புதிய எழுச்சியை தருக

Checkmark button புத்தாண்டு என்றவுடன்

மனிதர்களின் மனங்களில்

ஓர் புத்துணர்ச்சி பிறந்து விடுகிறது

புதிய சபதங்களும் நெஞ்சத்தில்

உதித்து விடுகின்றது

Checkmark button புத்தாண்டில்

புத்தம் புது சிந்தனைகள்

விடியலின் எழுச்சியோடு

மனதிலே உதயமாகட்டும்

புது வெள்ளமென தரணியில்

இன்பங்கள் பொங்கட்டும் WhatsApp Down: அனைவரையும் வாட்டி எடுத்த வாட்ஸ்அப்.. என்னப்பா ஆச்சு?.!

Checkmark button புத்தாண்டில்

மக்களின் குறைகள் எல்லாம்

பகவலனை கண்ட பனிபோல்

மறையட்டும்

பாரத நாட்டின் பண்பாடுகள்

திக்கெட்டும் ஒலிக்கட்டும்

Checkmark button புத்தாண்டில்

வல்லான் பொருள் குவிக்கும்

நிலைமை மாற வேண்டும்

தனி மனிதன் தன்மானத்தோடு

வாழ்ந்திட வேண்டும்

Checkmark button புத்தாண்டில்

மனிதர்களின் நியாயமான

விருப்பங்கள் எல்லாம்

எண்ணம்போல் ஈடேறட்டும்

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

Checkmark button எல்லோருக்கும்

இனிய புத்தாண்டு

நல் வாழ்த்துக்கள்

வாழ்க நலமுடன்....!!

- நன்றி, கோவை சுபா.

Checkmark button கோபம் தாண்டு

பொறாமை தாண்டு

தடைகள் தாண்டு

ஆசைகள் தாண்டு

வெறுப்பைத் தாண்டு

பயத்தைத் தாண்டு

பொய்களைத் தாண்டு

பிறக்கும்

பெரு மகிழ்ச்சிப் புத்"தாண்டு" !

Checkmark button இருள் தாண்டி

வெளிச்சம் பிறக்கும்

ஒவ்வொரு காலையும்

புத்தாண்டே !

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

- நன்றி, நா முரளிதரன்

Checkmark button பெரு மகிழ்வின் பொழுதுகள்....

பேரானந்ததில் நாட்கள்....

மன நிறைவில் மாதங்கள்...

நாள்தோறும் நலம் கூட்டி...

சுற்றமும் நட்பும் வாழ்த்த வாழ்வோம்....

இப்புத்தாண்டு நமக்கு ஆகச் சிறந்த மாற்றங்களை உருவாக்கட்டும்....

- நன்றி, மான்விழி ரஞ்சித்.

Tamil New Year Wish 2024 (Photo Credit: @LatestLY)

இவ்வாழ்த்துக்களை உங்களின் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து, தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க எமது லேட்டஸ்ட் லி தமிழ் சார்பில் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.