Balakai Chops Recipe: பலாக்காய் சாப்ஸ் மிக சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
வித்தியாசமான சுவையில் பலாக்காய் சாப்ஸ் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
அக்டோபர் 16, சென்னை (Kitchen Tips): முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் (Jackfruit) மிகவும் சுவையாக இருக்கும். இதனை பலமுறைகளில் சமைத்து சாப்பிட்டுருப்போம். ஆனால், இந்த பலாக்காயை வைத்து சுவையான முறையில் பலாக்காய் சாப்ஸ் (Balakai Chops) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பலாக்காய் - கால் பகுதி
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - கால் கப்.
உப்பு - அரை தேக்கரண்டி. Egg Garlic Spice Recipe: ஆந்திரா ஸ்டைல் முட்டை பூண்டு மசாலா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
அரைக்க தேவையானவை:
மிளகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்
தக்காளி - 2
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
- முதலில் பலாக்காயை சதுரமான துண்டுகளாக நறுக்கவும். இதனை, சிறிது மோர் கலந்த தண்ணீரில் பலாக்காயை நறுக்கிப் போட்டால் கருக்காது.
- பின் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
- பிறகு, அரைத்த மசாலாவைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கி, பலாக்காயைப் போட்டுக் கிளறி மூடி, மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்தபிறகு சுருள சுருளக் கிளறி இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான பலாக்காய் சாப்ஸ் ரெடி.