Aval Milk Keer Recipe: அவல் பால் கீர் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

Aval Milk Keer (Photo Credit: YouTube)

ஏப்ரல் 23, சென்னை (Kitchen Tips): அவலில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் இதில் உள்ளன. அந்தவகையில், அவலை வைத்து அவல் பால் கீர் எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்

வெல்லம் - 1 கப்

பால் - 6 கப்

முந்திரி - 15

நெய் - 2 கரண்டி

உலர் திராட்சை - 4 கரண்டி

ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி

கண்டென்ஸ்டு மில்க் - அரை கப். Confiscation Of Cannabis: 30 கிலோ கஞ்சா பறிமுதல்; சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை.!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அதில் உலர் திராட்சை, முந்திரி போட்டு வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். பின்னர், அதே நெய்யில் அவல் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பிறகு, மற்றொரு பாத்திரத்தில் பால் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதில் வறுத்து வைத்துள்ள அவல் சேர்த்து வேகவைக்கவும். பிறகு அதோடு முந்திரியை ஊறவைத்து அரைத்துக்கொண்டு அதனையும் இதோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் கன்டென்ஸ்டு மில்க் ஊற்றவும், இதனால் கீர் நன்கு கெட்டியாகிவிடும். இறுதியாக வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிவிடவும். அவ்வளவுதான் சுவையான அவல் பால் கீர் ரெடி.