Cannabis (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 23, ராயக்கோட்டை (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை, கெலமங்கலம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க காவல் தனிப்படை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியாம்பி மற்றும் கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோருடன் காவல்துறையினர், நேற்று முன்தினம் குடியூர் கிராமத்தில் வசிக்கும் முருகேசன் (வயது 37) என்பவரது வீட்டிற்கு சென்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். Child Marriage Case: சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..!

அப்போது, அவரது வீட்டின் பின்புறமாக மறைத்து வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், அதே கிராமத்தில் மல்லேஷ் (வயது 30) என்பவரின் வீட்டிலும் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, முருகேசனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கஞ்சா போதைப் பொருட்களை மற்றொரு நபரிடன் இருந்து வாங்கி வந்ததும், ஆந்திர மாநிலத்தில் இருந்து மொத்தமாக கொண்டு வரப்பட்டதும் கண்டறியப்பட்டது. பின்னர், அவரை கைது செய்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (District Superintendent Of Police) தங்கதுரை அவர்கள் கூறுகையில், "கஞ்சா, குட்கா, மணல் கடத்தல், பனங்கல் விற்பனை மற்றும் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் ஏதேனும் தெரிய வந்தால், உடனடியாக காவல்துறையினருக்கு 24 மணி நேரமும் செல்போன் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.