Elaneer Pongal Recipe: சுவையான இளநீர் பொங்கல் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இளநீர் பொங்கல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஆகஸ்ட் 23, சென்னை (Kitchen Tips): எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் பொங்கல் செய்து சாப்பிடுவதை தவிர்த்து, சற்று வித்தியாசமாக இளநீரை (Tender Coconut) பயன்படுத்தி எப்படி சுவையாக பொங்கல் (Elaneer Pongal) செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இளநீரில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நம் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
தேவையான பொருட்கள்:
இளநீர் - 2 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
பச்சரிசி - 2 கப்
நெய் - கால் கப்
முந்திரி - 2 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பால் - ஒரு கப்
பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை
பாசிப் பருப்பு - கால் கப்
தேங்காய்பல் - மேசைக்கரண்டி. Kathirikai Curry: இட்லி, சப்பாத்திக்கு ஏற்ற சுவையான கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பை வறுத்து வைத்து கொண்டு, அதோடு பச்சரிசியை சேர்த்து கழுவ வேண்டும். இவை இரண்டையும் குக்கரில் வைத்து அதற்கு இரு மடங்கு தண்ணீர் மற்றும் இளநீரை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு குக்கர் மூன்று விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
பின், குக்கரில் பிரஷர் போனதுமே குக்கரைத் திறந்து, அதில் சர்க்கரை, தேங்காய்ப் பாலை சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர், தேங்காயை நன்றாக பல்லு பல்லாகக் கீறி, அதனை நெய்யில் வறுத்து முந்திரியை சேர்த்து வறுத்து இறக்கி வைத்துள்ள பொங்கலில் சேர்க்கவும்.
அதனுடன் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்தால் இளநீரின் இயற்கை வாசனையைக் கெடுத்து விடும். எனவே, அவை இங்கு தேவையில்லை. இப்போது, சுவையான இளநீர் பொங்கல் ரெடி. இதனை பரிமாறும் முன்பு பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.