ஆகஸ்ட் 23, சென்னை (Chennai): நமது வீடுகளில் எப்போதும் கத்தரிக்காய் வைத்து சாம்பார், புளிக்குழம்பு, அவியல், பொரியல் என பலவகைகளில் செய்து சாப்பிட்டு இருப்போம். ஒரே மாதிரியாக கத்தரிக்காயை குழம்புக்கு (Brinjal Curry Recipe) பயன்படுத்துவோர், அதனை பெரும்பாலும் சோறுடன் மட்டுமே சாப்பிடும் வகையில் தயாரிப்பார். ஆனால், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் என பல வகைகளுக்கும் ஒருசேர சுவைத்து சாப்பிடும் வகையில் கத்தரிக்காய் குழம்பு (Ka) செய்ய உங்களுக்குத் தெரியுமா? இன்று அதுகுறித்து தெரிந்துகொள்ளுங்கள். Vegetable Soup Recipe: ஒரு முறை காய்கறி சூப் இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!
கத்தரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் சில:
தனித்துவமான ஊட்டச்சத்துக்களை கொண்ட கத்தரிக்காயில், உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும் வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இவை மனிதனின் எலும்பு, மூளை, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆயுர்வேதத்தில் பல மருத்துவ குணம் கொண்டதாகவும் கவனிக்கப்படுகிறது. கத்தரிக்காயில் பல வகை இருந்தாலும், அதில் ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட நன்மைகளை வழங்கும் தன்மையை கொண்டுள்ளன. இதில் இருக்கும் நார்சத்து, கரையக்கூடிய கார்போஹைட்ரேட் ரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். நரம்புகளுக்கு வலுசேர்க்கும். உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு வரப்பிரசாதம்.
கத்தரிக்காய் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1/4 கிலோ,
கடுகு உளுந்து - 1 கரண்டி,
சோம்பு - 1 கரண்டி,
சீரகம் - 1 கரண்டி,
பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ - சிறிதளவு,
பல்லாரி வெங்காயம் - 4 அல்லது சிறிய வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 3,
முந்திரி - 10,
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய் தூள் - 2 கரண்டி,
கறிமசால் - 2 கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 கரண்டி,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் எடுத்துக்கொண்ட கத்தரிக்காயை நன்கு கழுவி, பின் அதனை நான்காக நீளவாக்கில் பிளந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அகல வாக்கில் சாப்பிட்டு பழகியோர், உங்களின் விருப்பத்திற்கேற்ப நறுக்கிக்கொள்ளலாம். பின் அதில் இருக்கும் தண்ணீரை உதறிவிட்டு, எண்ணெயில் சேர்த்து முதலில் 85 - 90% பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். Chettinad Tomato Kuzhambu Recipe: செட்டிநாடு ஸ்டைலில் தக்காளி குழம்பு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
- வானெலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு, சோம்பு, வெங்காயம், தக்காளி, முந்திரி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். வதக்கிய பின்னர் அதனை ஆறவைத்து, மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் வானெலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, சீரகம், கறிவேப்பில்லை, மஞ்சள் தூள், மசாலா, கறிமசால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும். மசாலா வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள கலவையை எடுத்து சேர்க்க வேண்டும். அதனை நன்கு கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கத்தரிக்காயை சேர்க்க வேண்டும்.
உப்பு தேவையான அளவு சேர்த்து, நீர் சிறிதளவு விட்டு கொதிக்கவைத்து, இறுதியில் சிறிதளவு மல்லித்தழைகளை தூவி இறக்கினால் சுவையான கத்தரிக்காய் குழம்பு தயார்.