IPL Auction 2025 Live

Fish Pepper Masala Recipe: காரசாரமான மீன் மிளகு மசாலா செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

வீட்டில் காரசாரமாக மீன் மிளகு மசாலா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Fish Pepper Masala (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 20, சென்னை (Kitchen Tips): பொதுவாக மீன்களை குழம்பு செய்தோ, அதனை வறுத்தோ சாப்பிடுவோம். ஆனால், இந்த முறையில் அதனை மிளகு மசாலா சேர்த்து கிளறிவிட்டு, சுவையாக மீன் மிளகு மசாலா (Fish Pepper Masala) எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம். இது மிகவும் காரசாரமான சைடிஷ் ஆகும். இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள் :

மீன் - அரை கிலோ (துண்டு துண்டாக வெட்டியது)

வெங்காயம் - 200 கிராம்

பச்சை மிளகாய் - 4

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 5

கொத்த மல்லி இலை - 1 கப்

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Cake Recipe in Tamil: ஓவன் இல்லாமல் குக்கரில் கேக் செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

செய்முறை:

முதலில் வெங்காயம், கொத்த மல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து, மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

இவை அனைத்தும் ஒரளவு வதங்கியதும் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை லேசாக கிளறி, புரட்டி விடவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மூடி வைத்து வேகவைக்க வேண்டும்.

மீன் வெந்ததும், மிளகு துளை சேர்த்து கிளறவும். இறுதியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மீன் மிளகு மசாலா ரெடி.