Cake (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 20, சென்னை (Kitchen Tips): வீட்டிலேயே சுவையான கேக் (Cake Recipe) செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும். வாங்க அதனை செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டை - 3

மைதா - ¼ கிலோ

சர்க்கரை - 200 கிராம்

பட்டர் - 150 கிராம்

கோக்கோ பவுடர் - 2 ஸ்பூன்

பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்

சாக்கோ சிப்ஸ் - தேவையான அளவு Hotel Style Malli Chutney Recipe: ஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி சுவையாக செய்வது எப்படி..?

செய்முறை:

கோக்கோ பவுடரை சுடுதண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து வைத்து கொள்ளவேண்டும். பாத்திரத்தில் முட்டையை நுரை வரும் வரை நன்கு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் கோக்கோ கலவையை சேர்க்க வேண்டும். அதனுடன் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் இரண்டையும் சிறிது சிறிதாக சேர்த்து கலக்க வேண்டும். மேலும் பொடித்த சர்க்கரையையும் பட்டரையும் சேர்த்து கலவையாக்கி இதில் ஊற்றி கட்டிகள் இல்லாதவாறு கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் தடவி சிறிது மைதாவை தூவி அதில் கேக் கலவையை பாதியாக ஊற்ற வேண்டும். குக்கரில் உப்பு அல்லது சர்க்கரை கொட்டி கனமான தட்டு ஒன்றை உள்ளே வைத்து சூடுசெய்ய வேண்டும். பின் அதில் இந்த கலவையுள்ள பாத்திரத்தை வைத்து 30 நிமிடத்திற்கு வேக விட வேண்டும். அதற்கு பின் வெளியே எடுத்து சுவைக்கலாம்.