karaikudi Nandu Masala Recipe: காரைக்குடி ஸ்பெஷல் நண்டு மசாலா சுவையாக செய்வது எப்படி..?
காரைக்குடி ஸ்பெஷல் நண்டு மசாலா மிகவும் சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
அக்டோபர் 08, சென்னை (Kitchen Tips): நண்டு (Crab) மசாலா ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொருவிதமாக சமைக்கப்படும். சற்று வித்தியாசமாக காரைக்குடி நண்டு மசாலா (karaikudi Nandu Masala) செய்து சாப்பிடலாம். இதில் புளி மற்றும் முந்திரி சேர்த்து அரைத்த மசாலாவை கலந்து சமைப்பது தான் இதன் தனி சுவை ஆகும். இதனால் இந்த நண்டு மசாலா மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். காரைக்குடி நண்டு மசாலா சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நண்டு - 1 கிலோ
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
புளிக்கரைசல் - 1 கப்
பட்டை, பிரியாணி இலை -2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி. Poosani Masala Recipe: பூசணி மசாலா வித்தியாசமான முறையில் சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
மசாலாவிற்கு தேவையானவை:
துருவிய தேங்காய் - 1 கப்
முந்திரி - 3
மிளகு, சீரகம் - தலா 1 தேக்கரண்டி
சோம்பு - அரை கரண்டி
கசகசா - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து நண்டு சேர்த்து, பின் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் நன்கு வதக்கவும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
நண்டு ஓரளவு வெந்தபிறகு, அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான காரைக்குடி நண்டு மசாலா ரெடி.