Poosani Masala (Photo Credit: YouTube)

அக்டோபர் 07, சென்னை (Kitchen Tips): பூசணி மசாலா என்பது பூசணிக்காயை (Pumpkin)அடிப்படையாகக் கொண்ட இனிப்பு மற்றும் பானங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும், பல்வேறு மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட ஒரு சுவை கலவையாகும். பூசணி மசாலாவின் முதன்மை பொருட்கள் இலவங்கப்பட்டை, இஞ்சி, ஜாதிக்காய் மற்றும் கிராம்பு. இது இலையுதிர் மற்றும் குளிர்கால பருவங்களுடன் தொடர்புடைய சூடான மற்றும் நறுமண சுவையை வழங்குகிறது. அப்படிப்பட்ட பூசணி மசாலா (Poosani Masala) ரெசிபி சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Mutton Sukka Fry: சண்டே ஸ்பெஷல்; மட்டன் சுக்கா ப்ரை செய்வது எப்படி? .. ஆடு இறைச்சி நன்மைகள்.. இல்லத்தரசிகளுக்கான அசத்தல் டிப்ஸ் உள்ளே.!

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - அரை கிலோ

சீரகம் - ஒரு தேக்கரண்டி

அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்துள் - ஒரு தேக்கரண்டி

சமையல் எண்ணைய் - 3 மேசைக்கரண்டி

புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் பூசணிக்காயின் தோலை சீவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது சீரகத்தை பொரிய விடவும்.
  • சீரகம் பொரிந்ததும் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பை மிதமான தீயில் எரிய விட்டு மூடி வைக்க வேண்டும்.
  • சீரகம் அரை தேக்கரண்டி எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பூசணிக்காய் வெந்ததும், அரிசி மாவை நன்றாக வதக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவுடன் சீரகத்தூளையும் தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான பூசணி மசாலா ரெடி.