Murungai Keerai Thokku Recipe: இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை தொக்கு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
சத்தான முருங்கைக் கீரை தொக்கு எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
அக்டோபர் 23, சென்னை (Kitchen Tips): முருங்கைக் கீரையில் (Drumstick Spinach) அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முருங்கை கீரையை சாப்பிட்டு வரலாம். இதில், வைட்டமின்கள் பி, சி, கே, புரோ விட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மருத்துவ குணம் நிறைந்த இந்த முருங்கை கீரையில் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை தொக்கு (Murungai Keerai Thokku) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Kerala Coconut Chammanthi Recipe: கேரளா ஸ்பெஷல் சம்மந்தி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை - 3 கைப்பிடி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 12
சீரகம் - 1 கரண்டி
வெந்தயம் - அரை கரண்டி
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - அரை கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - 1 கரண்டி
உளுந்தம்பருப்பு - அரை கரண்டி
பெருங்காயம் - அரை கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
கடலை எண்ணெய் - 4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் குக்கரில் 3 கைப்பிடி அளவிற்கு சுத்தம் செய்த முருங்கை கீரை, அதனுடன் துவரம் பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும்வரை வேக வைக்க வேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் கடலை எண்ணெய் 4 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், பூண்டு, வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதில் சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதை நன்கு ஆற வைத்து அதில் புளி சேர்த்து, சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
- தாளிப்பிற்கு நல்லெண்ணெய் 4 தேக்கரண்டி ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அரைத்து வைத்த தொக்கை சேர்த்து கிளறிவிடவும்.
- அதன்மேல் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மூடி போட்டு, சுமார் 5 நிமிடம் அப்படியே வைத்து பின் திறந்து பார்த்தால், சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை தொக்கு ரெடி.