அக்டோபர் 22, சென்னை (Kitchen Tips): சம்மந்தி என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான தேங்காய் சட்னி அல்லது துவையல் ஆகும். கேரளாவில் இதை தேங்காய் சம்மந்தி அல்லது சம்மந்தி பொடி என அழைக்கின்றனர். கேரள மக்கள் சம்மந்தியை சிவப்பு அரிசியோடு பிரட்டி சாப்பிடுகின்றனர். நாம் இட்லி, தோசையோடு தொட்டு சாப்பிடும் சட்னி என புரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 6
இஞ்சி- 1 துண்டு
உப்பு- தேவையான அளவு
தேங்காய்- 1
சின்ன வெங்காயம்- 10
புளி- சிறிதளவு
கறிவேப்பிலை- 1 கொத்து Carrot Kesari Recipe: தித்திக்கும் கேரட் கேசரி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
செய்முறை:
ஐந்து அல்லது ஆறு சிவப்பு வர மிளகாய் ஒரு கடாயில் ஒரு நிமிடம் மட்டும் வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த மிளகாய் சிறு துண்டு புளி சின்ன வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த பிறகு துருவி வைத்திருந்த கால் மூடி தேங்காய் துருவலை இதனுடன் சேர்த்து அதன் அதனோடு கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் சுட சுட சாதம் இலையில் போட்டு அதனோடு அரைத்து வைத்திருந்த சம்மந்தியை இதில் சேர்த்து கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
சம்மந்தியை தண்ணீர் ஊற்றாமலும், மிக்ஸியில் முழுமையாக அரைக்காமலும் செய்ய வேண்டும். ஏனெனில் இது நெடுந்தூர பயணங்களுக்கு வாழை இலையில் கட்டித் தரப்படுகிறது. தக்காளி சாதம், லெமன் சாதம் போல மதிய வேளை உணவாக சாதத்துடன் சம்மந்தியை பிசைந்து சாப்பிடுகின்றனர். தண்ணீர் இன்றி செய்வதால் சம்மந்தி கெட்டுப் போகாது.