Potato Mush Recipe: சுவையான உருளைக்கிழங்கு மசியல் செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக உருளைக்கிழங்கு மசியல் உள்ளது.
மார்ச் 15, சென்னை (Kitchen Tips): நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக உருளைக்கிழங்கு உள்ளது. அதை எப்படி சமைத்து கொடுத்தாலும், அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அந்த வகையில், சப்பாத்தி, பூரி, புலாவ் என அனைத்திருக்கும் ஏற்றாற்போல் உருளைக்கிழங்கை நாம் பல விதத்தில் எப்படி செய்து சாப்பிடுவது என்று இந்த பதிவில் காண்போம். Teeth Care Tips: பற்களை பராமரிப்பது எப்படி? – சிறந்த சிகிச்சை முறைகள் இதோ..!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – 1 கரண்டி
மஞ்சள் தூள் – அரை கரண்டி
இஞ்சி விழுது – அரை கரண்டி
எலுமிச்சை சாறு – சிறிதளவு
கடுகு – அரை கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை: உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து, ஆறியதும் அதன் தோலை உரித்துக்கொள்ளவும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். பின் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போடவும். கடுகு பொரிந்து, உளுத்தம்பருப்பு சிவப்பு நிறத்திற்கு மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதனுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு என அனைத்தும் போட்டு அதனுள் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு மிதமான சூட்டில் பத்து நிமிடங்களுக்கு சமைக்கவும்.
சிறிது நேரம் கழித்து, உருளைக்கிழங்கு நன்றாக வெந்து ஓரளவிற்கு மசிந்தவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கிளறிவிட்டு, சிறிது நேரத்தில் சுவையான அருமையான உருளைக்கிழங்கு மசியல் ரெடி.