மார்ச் 15, சென்னை (Health Tips): நம் பற்கள் தொப்பி, வேர் என இரண்டு பகுதிகளாக உள்ளது. வேரின் கட்டமைப்பை நம்மால் பார்க்க இயலாது. இது ஈறுகளால் மூடப்பட்டிருக்கும். சில நேரங்களில் நாம் பல் (Teeth) வலியால் வேதனையடைவோம். அப்போது, பற்களை பார்க்கும் போது நன்றாக தான் தெரியும். ஆனால், மருத்துவ பரிசோதனையில் தான் பற்களின் வேரில் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்துகொள்ள முடியும். School Boy Sexual Harassment: ஓரினச்சேர்க்கை செய்ய வற்புறுத்தி கொலை – பள்ளி மாணவன் வெறிச்செயல்..!
இதற்கு நாம் அனைவரும் வேர் சிகிச்சை செய்து கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானதாகும். மேலும், இதில் சாதாரண மயக்க மருந்து செலுத்தி பாதிப்படைந்த ஈறுகளில் உள்ள சதைகளை நீக்கி, சுத்தம் செய்து, பிறகு செயற்கை பொருளை வைப்பார்கள்.
லேசர் சிகிச்சை: இதில் லேசரின் உதவியால் பாதிக்கப்பட்ட வேர்களில் உள்ள நோய்த்தொற்றுகளை நீக்குவார்கள். இது நவீன தொழில்நுட்பமாகும். சில சமயங்களில் வேர் சிகிச்சையும் இதோடு சேர்த்து செய்வார்கள்.
ரூட் பிளானிங்: வேர்களின் உள்ளே வரை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த சிகிச்சை மேற்கொள்ளப் படும். வேர்களில் உள்ள கிருமியை நீக்க பயன்படுகிறது.
பல் நுனித் துண்டிப்பு சிகிச்சை: இதில் வேரின் நுனிப் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால், இந்த அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
ஈறுகளில் மஜாஜ்: ஈறுகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் பற்கள் நன்றாக இருக்கும். ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் கொண்டு தினமும் காலை மாலை என இரண்டு வேலைகளும் 5 நிமிடத்திற்கு ஈறுகளுக்கு மஜாஜ் செய்வது நல்லது.
நம் நாக்கை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். கிளிசரின் அல்லது காட்டன் பேடை கொண்டு சுத்தம் செய்து வருவதால், இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதோடு பாக்டீரியா இல்லாமலும் பாதுகாத்துக்கொள்ளும். தினமும் காலை இரவு என இரண்டு முறை பல் துலக்க வேண்டியது அவசியம். வாய் சுகாதாரத்தை நாம் சரியாக பராமரித்து கொள்ளவேண்டியது நமது கடமையாகும். அனைவரும் உணவருந்திவிட்டு இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்பளிப்பது நல்ல பலன் அளிக்கும். இறுதியாக, அனைவரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.