Rava Laddu Recipe: ருசியான ரவா லட்டு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
குழந்தைகளுக்கு பிடித்தமான ரவா லட்டு எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
நவம்பர் 02, சென்னை (Kitchen Tips): ரவா லட்டு மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்பு வகை ஆகும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். தீபாவளி (Diwali) மட்டுமல்லாமல் அனைத்து பண்டிகை தினங்களிலும், இதனை வீடுகளில் செய்து சாப்பிட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ரவா லட்டுவை (Rava Laddu) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Chettinad Ukkarai Recipe: அல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு உக்காரை செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
ரவை - 400 கிராம்
சர்க்கரை - ஒன்றரை கப்
முந்திரி - 10
ஏலக்காய் - 5
நெய் - 100 மில்லி
செய்முறை:
- முதலில் ரவையை கருகாமல் வருத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுத்து, சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின், ரவை மற்றும் சர்க்கரை, ஏலக்காய் அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு, அதில் நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
- மேலும், அதில் முந்திரிப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, அதனை கலவையில் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
- இறுதியில், முந்திரி பொறித்த நெய்யை எடுத்து, சிறிது சிறிதாக ஊற்றி லட்டு பிடிக்கும் பதத்திற்கு வந்த பிறகு லட்டு பிடிக்கலாம். அவ்வளவுதான் சுவையான குழந்தைகளுக்கு பிடித்தமான ரவா லட்டு ரெடி.