Chettinad Aviyal Recipe: சத்தான காய்கறிகளை கொண்டு செட்டிநாடு அவியல் செய்வது எப்படி..?
செட்டிநாடு அவியல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஆகஸ்ட் 29, சென்னை (Kitchen Tips): சத்து நிறைந்த காய்கறிகளை பயன்படுத்தி செட்டிநாடு அவியல் (Chettinad Aviyal) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இந்த அவியல் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி ஆகியவற்றுக்கு ஏற்றதாகும். மேலும், இது சாதத்திற்கு சிறந்த சைடிஷ் ஆகும்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம், தக்காளி - தலா 1
பட்டை - சிறிய துண்டு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு. Delicious Onion Rings Recipe: மாலை ஸ்நாக்ஸ்க்கு ஐடியா.. ஆனியன் ரிங்க்ஸ் செய்வது எப்படி?!
அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் - கால் கப்
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 5
சோம்பு - 1 தேக்கரண்டி
பொட்டுக் கடலை - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். பின்பு அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பட்டை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேக விடவும்.
காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி. இது இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் அருமையாக இருக்கும்.