ஆகஸ்ட் 28, சென்னை (Kitchen Tips): வடை போண்டா செய்து அலுப்பாகி விட்டதா? ஸ்நாக்ஸ் செய்ய அதிக நேரம் செலவிட்டு சலித்துவிட்டீர்களா? இதோ இந்த சுவையான சுலபமான ஆனியன் ரிங்க்ஸ் (Onion Rings Recipe) செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
பெ.வெங்காயம் - 2
மைதா மாவு - ½ கப்
பிரட் கரம்ஸ் - ¼ கப்
சோள மாவு- 3 தேக்கரண்டி
பச்சரிசி - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - ½ தேக்கரண்டி
மிளகுத்தூள் - ¼ தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு Rose Flower Payasam Recipe: வித்தியாசமான முறையில் ரோஜாப்பூ பாயசம் செய்வது எப்படி..?
செய்முறை:
பெரிய வெங்காயத்தை சற்று தடிமனாக வளைய வடிவில் நறுக்கிக் கொண்டு அதிலுள்ள வளையங்களை தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். மைதா மாவு, சோள மாவு, பச்சரிசி மாவு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். வெங்காய வளையங்களில் ஈரப்பதம் போவதற்காக இந்த மாவுக்கலவையில் ஒருமுறை பிரட்டி எடுக்கவும். பின் மாவுக்கலவையில் சிறிது சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கறைத்துக் கொண்டு வெங்காயத்தை அதில் முக்கி எடுத்து பிரட் கிரம்ஸில் போட்டு பிரட்டவும். இதை இப்போது மிதமான சூட்டில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து ருசிக்கலாம்.