Orange Vanilla Rice Kheer Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரஞ்சு வெண்ணிலா ரைஸ் கீர் செய்வது எப்படி..?
குழந்தைகளுக்கு பிடித்த ஆரஞ்சு வெண்ணிலா ரைஸ் கீர் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
செப்டம்பர் 17, சென்னை (Kitchen Tips): அனைவருக்கும் பிடித்த குறிப்பாக குழந்தைளுக்கு பிடித்த ஆரஞ்சு (Orange) பழத்தை வைத்து ஆரஞ்சு வெண்ணிலா ரைஸ் கீர் எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவு நிறைந்துள்ளது. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. மேலும், சருமம் பொலிவு பெறும். ஆரஞ்சு நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் எடை குறைக்க உதவும். அப்படிப்பட்ட ஆரஞ்சு பழத்தை வைத்து ஆரஞ்சு வெண்ணிலா ரைஸ் கீர் (Orange Vanilla Rice Kheer) ப்படி செய்வது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். Butter Beans Kuzhambu Recipe: மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில் பட்டர் பீன்ஸ் குழம்பு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பழம் - 3
பால் - 4 கப்
பொடித்த பாஸ்மதி அரிசி - அரை கப்
கன்டென்ஸ் மில்க் - 5 மேசைக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் - 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியை துருவிக் கொள்ளவும். பிறகு ஆரஞ்சு பழத்திலிருந்து சதையை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- அடுத்து, 4 கப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 2 கப் அளவிற்கு சுண்டும் வரை நன்கு காய்ச்சவும் இந்தப் பாலில் பொடியாக அரைத்து வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ளவும்.
- பால் சுண்டியதும் ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். சில மணி நேரங்களுக்கு பிறகு பால் நன்றாக குளிர்ந்த பின், ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அதில் கண்டென்ஸ் மில்க்கை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
- இப்போது, அதில் தேவையான அளவு ஏலக்காய் தூள் மற்றும் தனியாக எடுத்து வைத்த ஆரஞ்சு சதையை சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்கவும்.
- இதனுடன் துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை மற்றும் 3 மேசைக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஆரஞ்சு வெண்ணிலா ரைஸ் கீர் ரெடி.