Road Side Kalan Recipe: வீட்டிலேயே ரோட்டுக்கடை காளான் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
வீட்டிலேயே சுலபமாக ரோட்டுக்கடை காளான் செய்வது எப்படி என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஆகஸ்ட் 30, சென்னை (Kitchen Tips): ரோட்டுக்கடை காளான் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அந்தவகையில் இதனை வீட்டில் எப்படி செய்து சாப்பிடுவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இதை காளான் மஞ்சூரியன் என்றும் அழைப்பர். மிகவும் சுவையாக வீட்டிலேயே எளிய முறையில் ரோட்டுக்கடை காளான் (Road Side Kalan) எப்படி செய்வது என்பதனை இதில் தெரிந்து கொள்வோம். Nethili Meen Kuzhambu Recipe: கிராமத்து ஸ்டைல் நெத்திலி மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 1 (சிறியது)
காளான் - 1 பாக்கெட்
மைதா - 100 கிராம்
சோளமாவு - 50 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கரம் மசாலா - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 250 மில்லி
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் முட்டைகோஸ் மற்றும் காளான் சேர்த்து, அதில் மைதா மாவு, சோள மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா இவை அனைத்தும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு, மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது என அனைத்தும் சேர்த்து சிறிது புட் கலர் சேர்க்கவும்.
பின்பு, நன்றாக வதக்கி அதில் சோளமாவு கரைத்து ஊற்ற வேண்டும்.
கொதி வந்தவுடன் அதில் செய்து வைத்த காளான் சேர்த்து நன்றாக கிளறி வற்றியதும் அதன்மேல் கொத்தமல்லி, வெங்காயம் தூவிவிட்டு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ரோட்டு கடை காளான் ரெடி.