Nethili Meen Kuzhambu (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 30, சென்னை (Kitchen Tips): அசைவ உணவு பிரியர்களுக்கு மீன் (Fish) என்றால் அவ்வளவு பிடிக்கும். மீனில் புரதச்சத்து நிறைந்து காணப்படும். அப்படிப்பட்ட மீனை பயன்படுத்தி பலவிதமான முறையில் குழம்பு, மீன் வறுவல் செய்து சாப்பிட்டுருப்போம். அந்தவகையில், நெத்திலி மீன் குழம்பு (Nethili Meen Kuzhambu) சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1 கிலோ

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - சிறிதளவு

வறுத்து அரைக்க தேவையானவை:

தனியா - 2 மேசைக்கரண்டி

சீரகம், மிளகு - தலா 1 தேக்கரண்டி

வர மிளகாய் - 12

பச்சரிசி - கால் தேக்கரண்டி. Chettinad Aviyal Recipe: சத்தான காய்கறிகளை கொண்டு செட்டிநாடு அவியல் செய்வது எப்படி..?

அரைக்க தேவையானவை:

சின்ன வெங்காயம் - அரை கிலோ

பூண்டு - 15 பல்

தக்காளி - 1

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - கால் கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பின், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.

இப்போது தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும். பிறகு, இதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து நன்றாக கலந்து ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு மண் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, வெந்தயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் மிதமான சூட்டில் நன்றாக கலக்கவும். இதில் தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் கொதிக்கவிட வேண்டும்.

ஒரு கொதி வந்த பிறகு, இதில் ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து வடிகட்டி சேர்க்கவும், இவற்றை மிதமான தீயில் 5 நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.

அடுத்து, கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி மீனை இதில் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து மூடி சுமார் 15 நிமிடம் வைக்கவும். 15 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்து, சுவையான நெத்திலி மீன் குழம்பு ரெடி.