Vazhaithandu Poriyal Recipe: வாழைத்தண்டு பொரியல் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட வாழைத்தண்டை பயன்படுத்தி பொரியல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஆகஸ்ட் 26, சென்னை (Kitchen Tips): வாழைத்தண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக, சிறுநீரக கற்கள் ஏற்படுவதை இது தடுக்கும். எனவே, வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு நல்ல பலனை அளிக்கும். அந்தவகையில், வாழைத்தண்டை வைத்து பொரியல் (Vazhaithandu Poriyal) செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு. Meal Maker Kuzhambu Recipe: பட்ஜெட் பிரியர்களே.. இறைச்சி சுவையில் மீல்மேக்கர் குழம்பு செய்து அசத்துங்க..!
செய்முறை:
முதலில் வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக வெட்டி, அரிசி கலைந்த தண்ணீரில் ஊற வைக்கவும். இப்படி செய்வதனால் வாழைத்தண்டு சமைக்கும் வரை கருத்துப் போகாமல் இருக்கும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். இதில் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு, நறுக்கி வைத்த வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதில், வெட்டி வைத்துள்ள வாழைத்தண்டு சேர்த்து மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து வேகவிட வேண்டும்.
வாழைத்தண்டு வெந்த பிறகு, அதில் துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து கொரகொரப்பாக பொடித்து, இறுதியாக அதனோடு சேர்த்து கலந்துவிடவும். அவ்வளவுதான் சுவையான வாழைத்தண்டு பொரியல் ரெடி.