Meal Maker Kuzhambu (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 24, சென்னை (Kitchen Tips): கறிக்குழம்பின் சுவையை மிஞ்சும் அளவிற்கு மீல் மேக்கரை வைத்து ஒரு குழம்பு செய்து கொடுத்தால், அசைவம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள் கூட இந்த குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட இந்த மீல் மேக்கர் குழம்பை (Meal Maker Kuzhambu) எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். இந்த மீல்மேக்கர் குழம்பு மட்டன் குழம்பு ருசியில் இருக்கும். இதனை சாதம், இட்லி, சப்பாத்தி என எல்லாத்துக்குமே வைத்து சுவையாக சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

மீல்மேக்கர் - 150 கிராம்

பெரிய வெங்காயம் - 2

நல்லெண்ணெய் - 6 கரண்டி

மல்லித்தூள் - 3 கரண்டி

மஞ்சள் தூள் - அரை கரண்டி

மிளகாய்த்தூள் - ஒன்றரை கரண்டி

தேங்காய் துருவல் - 3 கரண்டி

சோம்பு - 1 கரண்டி

கல்பாசி - 1 கரண்டி

பூண்டு - 10 பல்

முந்திரிப்பருப்பு - 6

கிராம்பு - 4

இஞ்சி - 5 சின்னத்துண்டு

பட்டை - 2 துண்டு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை:

பட்டை, சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு

வறுத்து அரைக்க தேவையானவை:

சின்ன வெங்காயம் - 15

மிளகு, சீரகம் - தலா 1 கரண்டி

தக்காளி - 2. Paal Kozhukattai Recipe: கிருஷ்ணருக்கு பிடித்த பால் கொழுக்கட்டை சுவையாக செய்வது எப்படி..?

செய்முறை:

முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் மீல் மேக்கர், சிறிதளவு உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு, தண்ணீரை வடிகட்டி பச்சைத் தண்ணீரில் 2 தடவை கழுவி தண்ணீரை பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து, ஒரு கடாயில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அதனை ஆறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பும், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, கிராம்பு, கல்பாசி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் பெரிய வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.

அதனுடன் தக்காளியும் சேர்த்து சிறிது வதக்கிவிட்டு, மீல்மேக்கர் சேர்த்து அதையும் சிறிது வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா விழுது, 3 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிவிடவும். இறுதியாக, மல்லி இலை தூவி கலந்து விட்டால், மிகவும் சுவையான மீல்மேக்கர் குழம்பு ரெடி.