Vegetable Biryani Recipe: வெஜிடபிள் பிரியாணி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
அனைவருக்கும் பிடித்தமான வெஜ் பிரியாணி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
செப்டம்பர் 12, சென்னை (Kitchen Tips): பிரியாணி என்றால் நம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அந்தவகையில், நாளுக்குநாள் பிரியாணி சாப்பிடுவார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில், நான்வெஜ் சாப்பிடாதவர்களுக்கு மாற்றாக சத்தான காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி ஆகும். இது பல வகையான காய்கறிகள், அரிசி மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அந்தவகையில், வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Palakottai Thuvaiyal Recipe: பலாக்கொட்டை துவையல் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
பச்சை பட்டாணி - கால் கப்
தக்காளி, பெரிய வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு - 2
கேரட், பீன்ஸ் - 5
பச்சை மிளகாய் - 3
சிவப்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள், மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
லவங்கம் - 4
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 1
சிறிய துண்டு பட்டை - 1
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, வடிகட்டி தனியே எடுத்து கொள்ளவும். அடுப்பில், குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும், பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின்னர், பொடியாக நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும். மேலும், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பிறகு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். கால் கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட வேண்டும். இப்பொழுது அதனுடன் பொடியாக நறுக்கி வைத்த கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, மற்றும் பீன்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
- ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின்னர், ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலக்கவும். பிறகு 2 தேக்கரண்டு நெய் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு, 5 முதல் 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால், சுவையான வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani) ரெடி.