Palakottai Thuvaiyal (Photo Credit: YouTube)

செப்டம்பர் 11, சென்னை (Kitchen Tips): முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை (Jackfruit) நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அதனை சாப்பிட்ட பிறகு அதில் உள்ள பலாக்கொட்டையை கீழே போட்டுவிடுவோம். அந்த பலாக்கொட்டையை (Palakottai Thuvaiyal) வைத்து சுவையாக துவையல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பலாக்கொட்டை - 10

வற்றல் மிளகாய் - 5

சின்ன வெங்காயம் - 5

பூண்டு - 4 பல்

ஜீரகம் - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - அரை கப்

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

உப்பு - தேவையான அளவு. Mushroom Pepper Fry: சுட்டிக்குழந்தைகளுக்கு பிடித்த வகையில், சுவையான காளான் மிளகு மசாலா செய்வது எப்படி?.. டிப்ஸ் உள்ளே.!

செய்முறை:

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பலாக்கொட்டையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர், வறுத்த பலாக்கொட்டையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து, வற்றல் மிளகாயையும் அதில் போட்டு, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் ‌‌2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிதாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு, மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வறுத்த பலாக்கொட்டை, வற்றல் மிளகாய், ஜீரகம், வதக்கிய சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான பலாக்கொட்டை துவையல் ரெடி.