Kanda Shasti 2024: கந்தசஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி..? முழு விவரம் இதோ..!
முருகப்பெருமானை தரிசிக்கும் கந்தசஷ்டி விரதம் எப்படி கடைபிடிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நவம்பர் 02, சென்னை (Festival News): தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் (Kanda Shashti Vratam) கடைபிடிக்கப்படுகிறது. திருச்செந்தூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், மற்ற கோவில் தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. நவம்பர் 02-ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் (Surasamharam) வரை சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பர். பொதுவாகவே விரத தினங்களில் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, மக்கள் பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர்.
கந்தசஷ்டி விரத முறை:
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு, தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால் வயோதிகர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது, அவரவர் உடல்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய வேளைகளில் நீராடுவது சிறந்தது. காலை, மாலை என வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியமாகும். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் துதித்தபடி கிரிவலம் வருவது நன்மை பயக்கும். Kanda Shasti 2024: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா; நவ.7ல் சூரசம்ஹாரம்.!
சூரசம்ஹார விரத முறை:
சூரசம்ஹார நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தை மனதார நினைத்து கும்பிட வேண்டும். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டிக்கொள்ளவும். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டவும். பின், தங்களது வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படத்திற்கு பொட்டு வைத்து, பூ வைத்து அலங்காரம் செய்யவும். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது படத்தினை வைத்து, தீபம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற துதிகளைச் சொல்ல வேண்டும்.
அருள் தரும் முருகப்பெருமான்:
முருகப்பெருமானுக்குரிய (Lord Muruga) சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று துதிப்பது நன்மை தரும். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற வரை பாலும், பழமும் இருந்தாலும் போதும். ஏழை எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அன்னதானம் வழங்கலாம். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியமானதாகும். அன்று மாலை, ஒரு சிலர் தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து, பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முருகன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். வாழ்வில் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகன் அருள் எப்போதும் உடன் இருக்கும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)