Tiruchendur Kanda Shasti 2024 Day 01 (Photo Credit: @ChendurMuruga X)

நவம்பர் 02, திருச்செந்தூர் (Thoothukudi News): முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா (Kanda Shasti Tiruvizha 2024) நடைபெறும். இதனை முன்னிட்டு நவம்பர் 02ம் தேதியான இன்று கந்தசஷ்டி விரத பூஜைகள் தொடங்கியது. இதனையடுத்து, நவம்பர் மாதம் 07ம் தேதி சூரஸம்ஹார நிகழ்வும் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழா (Kanda Sashti 2024):

இன்று அதிகாலை 01 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று, காலை 7 மணிக்கு மேல் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கி இருக்கிறது. சூரஸம்ஹார நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்நாடு, வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு விரதத்தை தொடங்கி இருக்கின்றனர். Theni Accident: போதை, அதிவேகத்தில் சோகம்.. இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி நண்பர்கள் மூவர் பலி.!

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

மொத்தமாக சுமார் 32 ஆயிரம் பேர் தங்கும் வகையில், 18 க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிகமான கொட்டைகைகள், கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் திருச்செந்தூரில் திரும்பும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் இருந்தது.

சூரசம்ஹாரம்:

அதேபோல, சூரஸம்ஹார நிகழ்வையொட்டி தேவையான பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவையும் தமிழக அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வுகளை காண நேரில் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கந்தசஷ்டி திருவிழா 2024: நாள் 01, ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளிய திருக்காட்சி

கந்தசஷ்டி திருவிழா விழா அழைப்பிதழ்: