Menstrual Cup Use: மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு வரமாக Menstrual Cup... உபயோகம் செய்யும் வழிமுறைகள் எப்படி?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க.!
பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் இரத்தப்போக்கை சேமித்து வைத்து பாதுகாப்பாக வெளியேற்ற நாப்கின் பேருதவி செய்கிறது. உலகளவில் நாப்கினின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத அத்தியாவசிய பட்டியலில் இடம்பெற்றுள்ளதே அதற்கு சாட்சி.
டிசம்பர், 11: பெண்கள் மாதவிடாய் (Menstruation) காலங்களில் சந்திக்கும் இரத்தப்போக்கை சேமித்து வைத்து பாதுகாப்பாக வெளியேற்ற நாப்கின் (Napkin) பேருதவி செய்கிறது. உலகளவில் நாப்கினின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத அத்தியாவசிய பட்டியலில் இடம்பெற்றுள்ளதே அதற்கு சாட்சி. நாப்கின் தொடர்பாக பல விமர்சனங்கள் இருந்தாலும், மாதவிடாய் நாட்களை பாதுகாப்பாக கடக்க பல புதிய பொருட்களும், நாப்கினிலேயே இயற்கை நாப்கினும் (Natural Napkins) என அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு பேருதவி புரியும் Menstrual Cup இன்றளவில் சந்தைகளில் எளிதாக கிடைக்கிறது. இது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்றாலும், அதன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே இருக்கிறது. சிலிகான் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாதவிடாய் குவளை, அலர்ஜியை ஏற்படுத்தாத வண்ணம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதனை ஒருமுறை உபயோகம் செய்துவிட்டு சூடான நீர் கொண்டு சுத்தம் செய்து மீண்டும் அதனை பயன்படுத்தலாம். அதேபோல, பார்ப்பதற்கு குவளை போல இருப்பதால், பிறப்புறுப்பில் வைத்தால் அது நழுவி விழுந்துவிடுமோ என்ற பயமும் வேண்டாம். அதனை சரியாக பொறுத்திவிட்டால் எந்த விதமான அசௌகரியமும் இருக்காது. அதற்கு ஏற்றாற்போலவே அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. #BabyAadharCard: குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெறுவது எப்படி?.. அவர்களின் ஆதாரில் இவ்வுளவு விஷயம் உள்ளதா?.!
இயற்கையாக சிறுநீர் பாதை, இனப்பெருக்க உறுப்பு, மலத்துவாராம் போன்ற மூன்றும் தசைகளை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும் என்பதால், மாதவிடாய் கப் இறங்கிவிடும் என்ற அச்சம் வேண்டாம். மாதவிடாய் கப்பை பெண் கழிவறைக்கு செல்லும் நிலையில் உட்கார்ந்து C வடிவில் குவளையை அழுத்தி தனது பிறப்புறுப்புக்குள் வைத்து தனது பணிகளை கவனிக்கலாம். அது எப்போதும் விழாது. பிறப்புறுப்புக்குள் வைத்த கப் அசௌகரியம் கொடுப்பது போல உணர்வு இருந்தால் அதனை சரியாக பொருந்தவில்லை என்று அர்த்தம்.
மாதவிடாய் சுழற்சி நிகழ்ந்த பின்னரோ அல்லது உறங்கி எழுந்து மறுநாள் காலையிலோ ஆட்காட்டி விரலால் சிறிதளவு அழுத்தம் கொடுத்து வெளியே இழுத்தாலே கப் வெளியே வந்துவிடும். அதனை சுத்தம் செய்து நாம் மீண்டும் உபயோகம் செய்யலாம். மாதவிடாய் கப்பை உபயோகம் செய்தால், அதனை 8 மணிநேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் அதனை சுத்தம் செய்ய வேண்டும்.
Note: மாதவிடாய் கப்பை பயன்படுத்தும் பெண்கள் விரல்களில் நகம் இல்லாதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நகம் தங்களின் அந்தரங்க உறுப்புகளை பதம்பார்க்க வாய்ப்புள்ளது. இதனால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். ஆகையால், கவனமாக செயல்படுவது நல்லது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 04:00 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)