நவம்பர் 02, நவிமும்பை (Sports News): இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup Finals 2025) இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை நடந்த 30 ஆட்டங்களில் இந்தியா தேசிய மகளிர் கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா தேசிய மகளிர் கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. புள்ளிப்பட்டியல்படி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் முதல் இரண்டு இடத்தில் இருந்தாலும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா - இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று கவனம் பெற்றுள்ளன. அதே நேரத்தில், இதுவரை இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெண்கள் பிரிவில் ஒரு கோப்பையை கூட கைப்பற்றாத நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் கிடைத்துள்ளது.
இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென்னாப்பிரிக்கா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி மோதல் (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team):
இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி (India Women Vs South Africa Women Final 2025) இடையே இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி ஐசிசி மகளிர் உலக கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி அதீத எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த போட்டி நவிமும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியின் நேரலையை (INDW Vs SAW Final Live Streaming) ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் காணலாம். இரு அணிகளும் சமமான அளவு போட்டித் தன்மையுடன் விளையாடும் என்பதால் போட்டி (INDW Vs SAW Final Live Score) மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போட்டியின் முதல் கட்டமாக டாஸ் நடைபெற்ற நிலையில், டாஸில் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. IND Vs AUS: 187 ரன்கள் இலக்கு.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் வெளுத்துக்கட்டிய டிம் டேவிட் & மார்கஸ்.!
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 India Vs South Africa):
போட்டி அணிகள்: இந்தியா W Vs தென்னாப்பிரிக்கா W (India Women's Vs South Africa Women's Cricket)
நடைபெறும் இடம்: டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானம், நவி மும்பை, மகாராஷ்டிரா
போட்டி முறை: 50 ஓவர்கள்
போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி
நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)
இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் அணி விபரம் (India Women Vs South Africa Women Squad):
தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி (South Africa Squad INDW Vs SAW Final 2025):
லாரா வோல்வார்ட் (C), டாஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், சுனே லூஸ், மரிசான் காப், சினாலோ ஜாஃப்டா (WK), சோலி ட்ரையன், அன்னேரி டெர்க்சன், நாடின் டி க்ளெர்க், அயபோங்கா காக்கா, எம் நோன்குலுலேகோ.
இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணி (India Women Squad India Vs South Africa Women Cricket 2025):
ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(C), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (WK), அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்.