Guru Purnima & Sawan Month: உற்சகமாக குரு பூர்ணிமாவை கொண்டாடிய மக்கள்; சிவன்-பார்வதிக்கு பிடித்த மாதத்தையும் வரவேற்று மகிழ்ச்சி.!

சிவன் ஆலயங்களில் மக்கள் திரளாக குவிந்து தெய்வங்களை வணங்கிச்சென்றனர்.

Guru Purnima Celebrations in UP (Photo Credit: @ANI X)

ஜூலை 22, லக்னோ (Uttar Pradesh News): அறிவொளியை தந்து நமது வாழ்க்கையை உயர்த்த உறுதுணையாக இருந்த குருக்களை கௌரவிக்கும் வகையில், வட மாநிலங்களில் ஆடி மாத பௌர்ணமி தினத்தில் குரு பூர்ணிமாவானது (Guru Purnima) சிறப்பிக்கப்படுகிறது. குழந்தைப்பருவம் முதல் வளரும் பருவம் வரையில், தங்களின் வாழ்க்கைக்கு துணையாக, அதனை நல்வழிப்படுத்தி, அறியாமை என்ற இருளை போக்கிய ஆசிரியர்களுக்கு சீடர்களான மாணவர்கள் நல்வழிப்படுத்த குரு பூர்ணிமா கடைபிடிக்கப்படுகிறது. Guru Purnima: அறிவொளியை தந்து வாழ்க்கையை உயர்த்திய குருக்களை கௌரவிக்கும் குரு பூர்ணிமா; வாழ்த்து, நல்லநேரம் இதோ.! 

குரு பூர்ணிமா கொண்டாட்டம்:

மகாபாரத ஆசிரியர் வேதவியாசரின் பிறந்த நாளை நினைவுபடுத்தி கொண்டாடும் வகையில், குரு பூர்ணிமா சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று ஆடி பௌர்ணமி அன்று குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பலரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி, கங்கை நதியில் நீராடி சிவன் பார்வதிக்கு பிடித்த அவர்களின் பாரம்பரிய மாதமான ஸ்வான் (Sawan) மாதத்தை வரவேற்றனர். அதேபோல, கோரக்பூர் பகுதியில் இருக்கும் ஜார்க்கண்ட் மகாதேவ் சிவன் ஆலயத்திலும் பக்தர்கள் திரளாக குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

மகாதேவ் கோவிலில் தரிசனம் செய்யும் மக்கள்: