Health Warning: இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுறீங்களா? இன்ஸ்டன்ட் மரணத்துக்கு வாய்ப்பு.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
நூடுல்ஸ் சமைப்பது சமையலில் எளிமை என்ற பெயரில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (Instant Noodles Death) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மரணம் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆகஸ்ட் 30, சென்னை (Health Tips): பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், அலுவலகங்களில் வேலை பார்ப்போர் என பலரும் தங்களின் சூழ்நிலை காரணமாக, காலை உணவு சமைக்காத பட்சத்தில் அல்லது சாப்பிடாத பட்சத்தில் மதிய நேரங்களில் கேண்டின்களில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர். ஒருசிலர் காலை தாமதமாக எழுந்து சுடுதண்ணீரை கொதிக்கவைத்து, நூடுல்ஸ் மற்றும் மசாலா சேர்த்து அப்படியே சேர்த்து சாப்பிட்டு பணியிடங்களுக்கு ஓடுகின்றனர். இவ்வாறான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்கள் (Instant Noodles Side Effects) மைதா மாவு கொண்டு முதலில் தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து மிகவும் குறைவு ஆகும். ஊட்டச்சத்துக்கள் எதுவுமே கிடையாது. இதில் உள்ள மசாலாக்களில் கெட்டுப் போகாத தன்மையை நீட்டிக்க அதிக அளவு சோடியமும் பயன்படுத்தப்படுகிறது. இதன் அளவு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட மிக அதிகம் ஆகும் என வல்லுனர்களால் எச்சரிக்கப்படுகிறது. செல்போன் கவரில் பணத்தை வைக்கும் நபரா நீங்கள்?.. இந்த தவறை மறந்தும் செஞ்சிடாதீங்க.!
பேராபத்து கொண்ட இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்:
இன்ஸ்டன்ட் நூடுல்ஸை அதிகம் தொடர்ந்து சாப்பிடுவதால், நமக்கு உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். பிரதானமாக விற்பனை செய்யப்படும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களில் மோனோ சோடியம் குளூட்டோமேட் என்ற பொருட்களும் இருக்கின்றன. இது நூடுல்ஸ் மற்றும் அதன் மசாலாக்களில் சேர்க்கப்படுகிறது. இவை நீண்ட நாட்கள் அந்த பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. அரசு அங்கீகரித்த அளவைவிட கூடுதலாக பயன்படுத்தப்படும் இந்த பொருட்கள் வயிற்று உப்பசம், தலைவலி, உடல் அசௌகரியம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும், பாமாயில் எண்ணெய் கொழுப்பு உடலுக்கு தேவையற்ற கலோரியை கொடுக்கிறது. இதனால் ஆரோக்கியமற்ற கொழுப்பு உடலில் சேர்ந்து உடல் நலம் சீர்கெடும். உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவற்றுக்கும் காரணமாக அமைகிறது. Health Warning: மூக்கு வழியாக மூளையை அடையும் அமீபா.. உயிரைப்பறிக்கும் ஆபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட என்ன செய்யலாம்?
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் கட்டாயம் சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைப்போர், உள்ளூரில் விற்பனை செய்யப்படும் நூடுல்ஸ் போன்றவற்றை வாங்கி சாப்பிடலாம். உள்ளூர் தயாரிப்புகளை பொறுத்தவரையில், அதில் சோடா உப்பு போன்றவை பயன்படுத்தப்பட்டாலும் அதன் அளவு குறைந்து இருக்கும். அதே நேரத்தில் தினமும் சாப்பிடுவது நல்லதல்ல. உடனடியாக சமைத்து சாப்பிடாமல் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பூண்டு போன்ற உடலுக்கு நன்மை சேர்க்கும், செரிமானத்தை ஊக்குவிக்கும் பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை சேர்க்கலாம். நமது வீட்டில் இருக்கும் மசாலாக்களை பயன்படுத்துவது நல்லது.
நூடுல்ஸ் பிரபலமானது எப்படி?
நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவது போல அதிக விளம்பரத்தை ஒளிபரப்பியது, கவர்ச்சி தரும் நிறம் மற்றும் மசாலா மீதான பார்வை போன்றவை மக்கள் அதனை திரும்பி பார்க்க வைத்தது. பல குழந்தைகளும் நூடுல்ஸை அதிகம் வாங்கி சாப்பிடத்தொடங்கி ஒரு கட்டத்தில் முழுநேரமும் அதனை சாப்பிட்டு மரணமும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உணவு விருப்பம் என்பது அவரவர் கையில் என்பதால், உங்களுக்கு தேவையானதை உடல்நலனுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள். ஆசையாக இருந்தால் 3 மாதம் 6 அல்லது மாதம் ஒருமுறை சுவைக்காக சாப்பிட்டு அத்துடன் மறந்துவிடுங்கள். பழக்கமாக்கினால் பின்விளைவு நமக்குத்தான்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)