ஆகஸ்ட் 28, கேரளா (Health News): நேக்லேரியா ஃபவுலேரி மற்றும் சேப்பினியா பேடேட்டா அமீபாக்களால் மனிதர்களுக்கு பரவும் மெனிஞ்சோ செபலைட்டிஸ் (Primary Amebic Meningoencephalitis) என்ற பாதிப்பு மூளையை தின்னும் அமீபா என அழைக்கப்படுகிறது. இந்த அமீபா குளம், குட்டைகளில் உள்ள நீரின் அடியில் உள்ள சகதியில் வாழக்கூடிய தன்மை கொண்டவை ஆகும். மனிதர்களின் மூக்கு வழியாக நுழையும் அமீபா மூளையை தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.
மருத்துவர்களின் எச்சரிக்கை :
நீர்நிலைகளில் குளிக்கும்போதும், நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களில் நீச்சல் கற்றுக்கொள்ளும்போதும் கவனமாக இருத்தல் வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த அமீபா மூக்கு வழியாக நுழைந்து நரம்புகளில் பயணித்து மூளையை சென்றடைந்து தாக்கும் என்பதால் மக்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்கை பிடித்து உள்ளே எந்தவித கிருமியும் செல்லாதவாறு பாதுகாத்து இருத்தல் அவசியம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. Health Warning: ஊறுகாய் பிரியர்களே உஷார்.. சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம்.!
மூளையை உண்ணும் அமீபாவின் அறிகுறிகள் :
இந்த அமீபா தாக்கியவர்களுக்கு முதல் 5 - 6 நாட்களுக்கு காய்ச்சல், தீவிர தலைவலி, குமட்டல், தலைசுற்றல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை தொடக்க அறிகுறிகளாக இருந்து பின் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த அமீபாவால் கேரளாவில் தற்போது வரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரள மாநில அரசு வரும் ஆகஸ்ட் 30 மற்றும் 31ம் தேதிகளில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தவுள்ளது.
அரசு அறிவுறுத்தல் :
மேலும் கிணறு, தண்ணீர் டேங்குகளில் இருக்கும் நீரை சுத்தப்படுத்த வைத்துக் கொள்ளுமாறும், ஹோட்டல், மருத்துவமனைகளில் உள்ள குடிநீரில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களை குளோரின் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.