IPL Auction 2025 Live

International Sculpture Day 2024: "பலமுறை கண்ட சிற்பம்.. ஒரு முறைகூட காணாத அழகு.." சர்வதேச சிற்பக் கலை தினம்..!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி சனிக்கிழமையன்று சர்வதேச சிற்பக் கலை தினம் அனுசரிக்கப்படுகிறது.

International Sculpture Day (Photo Credit: LatestLY)

ஏப்ரல் 29, புதுடெல்லி (New Delhi): கற்காலம் முதல் இன்றுவரை காலத்தை வேறுபடுத்திக் காட்டி வரலாற்று ஆய்வுகளுக்குத் துணைபுரிபவை சிற்பங்களே (Sculpture). வரலாற்றுச் சான்றுகளுக்குப் பெரிதும் கைகொடுப்பவை சிற்பங்கள்தான். அந்தக் கால சிற்பங்களில் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும் பழக்கம் இருந்தது. மன்னர்கள், சமயப் பெரியவர்கள் குறித்த வாழ்க்கைக் குறிப்புகள் படையெடுப்பு நிகழ்வுகள், மன்னர் கோயில் கட்டியது, ஆட்சி பரிபாலனம் செய்தது போன்ற பல தகவல்களைத் தெரிவிக்கும் ஆவணமாக இருப்பவை சிலைகள், சிற்பங்கள்தான். மனித நாகரிகத் தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்று களில் சிற்பக் கலை இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

சிற்பங்களின் செய்முறை: பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் மண் என்பவை அடங்குகின்றன. கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்கு வதன் மூலம் செய்யப்படுகின்றன. வேறு பொருட்களில் செய்யும் போது, ஒட்டுதல், உருக்கி வார்த்தல், அச்சுக்களில் அழுத்துதல், கைகளால் வடிவமைத்துத் சூளையில் சுடுதல் போன்ற பலவித செயல்முறைகள் கையாளப்படுகின்றன. Avadi Shocker: ஆவடியை அலறவிட்ட இரட்டைக்கொலை; வயோதிக தம்பதி கழுத்தறுத்து படுகொலை.. தலைநகரில் பரபரப்பு சம்பவம்.!

தமிழக சிற்பக்கலை: தமிழகத்தில் ஏராளமான கோயில்கள் கருவறையில் கற்களால் உளிகளைக் கொண்டு சிற்பிகள் வடித்த சிலைகளே இருக்கும். அதுமட்டுமில்லை தூண்கள், கோயில் கோபுரங்கள், விமானங்களில் எல்லாம் இடம்பெறுபவை சிற்பங்களே. சினத்தைக் கையாளும் இன்றைய உளவியல் அணுகுமுறைக்குப் பெரிதும் உதவியது சிற்பம்தானே! சிற்பம் உணர்வை வெளிப்படுத்துவது, சிற்பம் வரலாற்றைப் பதிவு செய்வது, சிற்பம் மானுடத்தை வளர்த்தெடுப்பது, சிற்பம் சிக்கலைத் தீர்ப்பது, சிற்பம், சிற்பம் சமூகத்திற்கும் அரசியலுக்கும் உதவுவது. அந்தக் கலையைப் போற்றுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி சனிக்கிழமையன்று சர்வதேச சிற்பக் கலை தினம் (International Sculpture Day, or IS Day) அனுசரிக்கப்படுகிறது.