ஏப்ரல் 29, ஆவடி (Chennai News): சென்னையில் உள்ள ஆவடி (Avadi), முத்தாப்பேட்டை, மிட்டனமல்லி தேவர் நகரில் வசித்து வருபவர் சிவம் நாயர் (வயது 72). இவர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவர், தற்போது வீட்டிலேயே சித்த மருத்துவராக (Siddha Doctor and his Wife Killed) பணியாற்றி, கிளீனிக் வைத்து நடத்தி வருகிறார். சிவம் நாயரின் மனைவி பிரசன்னா (வயது 60). தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணமாகி தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். Truck Collision 8 Died: மக்கள் பயணித்த மினி லாரி மீது மோதிய கனரக லாரி; 5 பெண்கள், 3 குழந்தைகள் பரிதாப பலி., 23 பேர் படுகாயம்.. மரண ஓலத்தில் அலறிய மக்கள்.! 

வயதான தம்பதி கழுத்தறுத்து படுகொலை: இதனால் வயதான தம்பதிகள் தங்களின் வீட்டில் தனியே வசித்து வந்துள்ளனர். நேற்று இரவு இவர்களின் வீட்டில் எந்த விதமான நடமாட்டமும் இல்லாத நிலையில், அக்கம் பக்கத்தினர் எதற்ச்சையாக உள்ளே சென்று பார்த்தபோது வயோதிக தம்பதிகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டவாறு சடலமாக கிடந்தனர். இதனைக்கண்டு அதிர்ந்துபோனவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். Chengalpattu Shocker: தெப்பக்குளத்தில் நீச்சலடித்து விபரீத முயற்சி; நண்பர் கண்முன் நீரில் மூழ்கி இளைஞர் பரிதாப பலி.! 

ஒருவர் கைது, சந்தேகத்தின் பேரில் விசாரணை: நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தம்பதிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக நிகழ்விடத்தில் கிடைக்கப்பெற்ற செல்போனின் அடிப்படையில், வடமாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்த வருகின்றனர். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.