December Festivals: டிசம்பரில் தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவிழாக்கள் எவை?.. அன்பு நெஞ்சங்களே திருவிழாக்களுக்கு தயாராகுங்கள்.!

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயங்களில் கார்த்திகையில் பிறகும் ஆண் குழந்தைக்கு யக்ஞபுருஷன், பெண் குழந்தைகளுக்கு இலட்சுமி என்றும் பெயர் வைத்து அழைக்கலாம்.

File Image: Kantha Shasti Festival

டிசம்பர், 10: தமிழில் சித்திரை மாதம் தொடங்கி 8வது மாதமாக இடம்பெறுவது கார்த்திகை. ஜோதிடத்தின் படி விருச்சகம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை ஆகும். ஆங்கில காலண்டரில் கார்த்திகை நவம்பர் - டிசம்பர் மாதங்களுக்கு இடையில் வரும். கார்த்திகை மாதத்தில் உள்ள பண்டிகைகளின் விபரம் & பிற தகவல்கள் குறித்து இனி காணலாம்.

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயங்களில் கார்த்திகையில் பிறகும் ஆண் குழந்தைக்கு யக்ஞபுருஷன், பெண் குழந்தைகளுக்கு இலட்சுமி என்றும் பெயர் வைத்து அழைக்கலாம்.

சங்காபிஷேகம்: கார்த்திகையின் 1, 8,15,22,29 ஆகிய நாட்களில் சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகம் சிறப்பு வாய்ந்தது ஆகும். அன்றைய நாளில் சிவனை தரிசனம் செய்வது கூடுதல் பலனை தரும்.

முடவன் முழுக்கு: கார்த்திகை மாதத்தின் 2ம் தேதி ஐப்பசி மாதத்தில் காவேரியில் நீராட இயலாதவர்கள் முடவன் முழுக்கு கடைபிடிக்கப்படும் கார்த்திகை 2ம் தேதி காவேரியில் நீராடினால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். அதேபோல, கார்த்திகை 3ம் தேதி நாகசதுர்த்தியில் விநாயகரை வழிபட்டால் கடன் பிரச்சனை சரியாகும். Mobile Number 10 Digit: இந்தியர்களின் மொபைல் நம்பர் எதற்காக 10 இலக்கங்களை கொண்டுள்ளது தெரியுமா??.. அசரவைக்கும் அசத்தல் தகவல் இதோ.! 

கந்தசஷ்டி திருவிழா (Kandha sasti kavasam): கார்த்திகை மாதம் 5ம் தேதி முருகன் கோவிலில் கந்தசஷ்டி நாளில் சூரஸம்ஹர நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால், திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சி மக்களால் அதிகளவு கொண்டாடப்படும்.

கால பைரவாஷ்டமி: கார்த்திகை மாதம் 23ம் தேதி சிறப்பிக்கப்படும் கால பைரவாஷ்டமி நாளில் விரதம் இருந்து கால பைரவரை வணங்கினால் நன்மைகள் கிடைக்கும்.

ரமா ஏகாதேசி: கார்த்திகை மாதத்தின் 26ம் தேதியில் சிறப்பிக்கப்படும் ரமா ஏகாதேசியில் பெருமாள் கோவிலுக்கு நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம்வர பெருமாளின் அன்பு கிடைக்கும். வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மனநிம்மதி போன்றவையும் கிடைக்கும்.

யம தீபம்: கார்த்திகை மாதத்தின் 27ம் தேதி மாலை நேரத்தில் வீட்டிற்கு வெளியே எமனுக்கு தெற்கு நோக்கி தீபம் ஏற்ற எம பயம் விலகும். வீட்டில் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் நோய் குணமாகி நலன் அடைவர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 05:27 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif