Elakkai Benefits: ஏலக்காயின் அசத்தல் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?.. மனமனக்கும் விபரம் இதோ.!

இயற்கையாக ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்ட ஏலக்காய், உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் பொருட்களில் ஒன்றாகும்.

Elakkai (Photo Credit: Pixabay)

ஜனவரி 30, சென்னை (Chennai): மசாலாக்களின் ராணி என்று வர்ணிக்கப்படும் ஏலக்காய் (Elakkai), நறுமணப் பொருளாக பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரிப்பின் போது, பிரதானமாக பயன்படுத்தப்படும் ஏலக்காய் (Cardamom) உணவின் சுவை மற்றும் நறுமணத்திற்காக சேர்க்கப்படுகிறது. இந்திய சமையலறையில் அஞ்சறை பெட்டியில் மசாலா பொருட்களை சேமித்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஏலக்காய்க்கும் தனி இடம் உண்டு. சுவைக்காக மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்ட ஏலக்காய், இயற்கையாக ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டவையாகும். இதனால் தொற்று நோயிலிருந்து நமது உடல் பாதுகாக்கப்படும். ஏலக்காய் விதைகளில் இருக்கும் நார்ச்சத்து, செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவி செய்யும். ஏலக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும். Universe Chants Jai Shri Ram: பிரபஞ்சமே உச்சரிக்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்; அமெரிக்காவில் இந்துக்கள் வியக்கவைக்கும் நெகிழ்ச்சி செயல்.! 

புகைப்பழக்கத்தை மறக்கவும் ஏலக்காய்: குடல் வழியாக உணவு விரைந்து செரிமானத்திற்கு செல்லவும் உதவி செய்யும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் இரத்த அளவை சமமாக பராமரிக்கவும் உதவுகிறது. வாய் துர்நாற்றம் கொண்டவர்கள் ஒரு ஏலக்காயை எப்போதும் வாயில் வைத்து மென்று கொண்டிருப்பது நல்லது. இது வாயில் உருவாகும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தியையும் வழங்கும். வளர்சிதை மாற்றம் ஊக்குவிப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுதல் போன்ற பல விஷயத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது. நிம்மதியான உறக்கத்திற்கும், புகைப்பழக்கத்தை மறக்கவும் ஏலக்காயை வாயில் மென்று பலன் பெறலாம்.