ஜனவரி 30, ஹஸ்டன் (World News): கடந்த ஜனவரி 22 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற முடிந்த ராமர் கோவில் திறப்பு விழாவை தொடர்ந்து, தினமும் அயோத்தி ராமர் கோவிலில் இலட்சக்கணக்கில் மக்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்த வருகின்றனர். மேலும், ராமர் கோவில் அறக்கட்டளைக்கு பரிசுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பதியை போல மிகவும் பிரசித்திபெற்ற இந்து கோவிலாக அமைந்துள்ள ராமர் கோவில், உலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுவதால் கோவிலுக்கு நேரில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Woman Stabs 50 times: கண்களை பிடுங்கி, 50 முறை உடலில் சரமாரியாக வெட்டி 21 வயது இளம்பெண் கொடூர கொலை: தலைநகரையே நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
உலகமே பேசும் ஒற்றை மந்திரம்: இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஹஸ்டன் நகரில் அமைந்துள்ள ராமர் கோவில் நிர்வாகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்து சமூகத்தினர் சார்பில், ஜெய் ஸ்ரீ ராம் மந்திரத்தை உலக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்டு, விமானத்தில் உலகமே ஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை சொல்கிறது என்ற வாசகத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடியாக பறக்க விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
VIDEO | Members of the Hindu community organised an aerial banner in Houston, US, on Sunday (January 28). An aircraft with a banner 'Universe Chants Jai Shri Ram' hovered over Houston as Indian-American devotees chanted 'Jai Shri Ram' waving flags during the event.
(Source:… pic.twitter.com/pEmqIoOKsA
— Press Trust of India (@PTI_News) January 30, 2024