Vellarikai Benefits: கோடையின் வரப்பிரசாதமாக இயற்கை கொடுக்கும் 'வெள்ளரிக்காய்': நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.!
இக்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும்.
மார்ச் 27, சென்னை (Health Tips): பொதுவாக கோடைகாலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் வெயிலினால் (Summer Season) ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்க தொடங்கிவிடும். முகத்தில் பரு, உடலில் நீரிழப்பு என வெயில் சார்ந்த பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறான விஷயங்களுக்கு கோடைகாலத்தில் இயற்கை கொடுத்த பலனாக வெள்ளரிக்காய் (Cucumber) மற்றும் வெள்ளரிப்பிஞ்சு போன்றவை பிரதானமாக மகசூல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். கோடை உக்கிரத்தில் இருக்கும் காலத்தில் வெள்ளரி பழங்களும் கிடைக்கும். இவற்றை வாங்கி சாப்பிடுவது நமது உடல்நலனை மேம்படுத்துவது மட்டுமல்லாது பல்வேறு விஷயங்களுக்கு உதவி செய்யும். Mango Halwa Recipe: தித்திக்கும்… மாம்பழ அல்வா.. குட்டீஸுக்கு பிடித்தவாறு செய்வது எப்படி?.!
நோய்தொற்றுக்கு சரியான எதிரி வெள்ளரிக்காய் (Vellarikai): அந்த வகையில் நார்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய் மலச்சிக்கல், வயிறு கோளாறு போன்றவற்றை தடுக்க வல்லது. கோடைகாலத்தில் காலை மற்றும் மதிய வேலைகளில் வெள்ளரிக்கையை சாப்பிட்டு வர செரிமான திறன் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள வெள்ளரிக்காயில் வைட்டமின், தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக அதனை சாப்பிடலாம். தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வைரஸ், பாக்டீரியா போன்ற சிறு அளவிலான நோய் தொற்றுக்கு உள்ளானவர்களும் வெள்ளரிக்காய்களை தயங்காமல் எடுத்துக் கொள்ளலாம். Businessman Son Killed: ரூ.50 இலட்சம் பணத்திற்காக கடத்தப்பட்ட தொழிலதிபர் மகன் படுகொலை; 8 பேர் கொண்ட கடத்தல் கும்பலை சுட்டுப்பிடித்த காவல்துறை.!
சிறுநீரக செயல்பாட்டுக்கு நல்லது: வெள்ளரிக்காயில் இருக்கும் நுண்கிருமி எதிர்ப்பு திறன் வாயிலாக, நோயெதிர்ப்பு சக்தி நமக்கு அதிகரிக்கும். உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீரகங்கள் இயற்கையாகவே வெளியேற்றி விடும். எனினும், கோடைகாலத்தில் அதிக வெப்பம் மற்றும் நீர் இழப்பு போன்ற பிரச்சனையால் நீர்ச்சுருக்கு, சிறுநீரக கற்கள் உண்டாகும். இதனால் தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வர, அப்பிரச்சனைகள் குறையும். வெயில் காலத்தில் கண்களில் இருக்கும் ஈரப்பதம் இயற்கையாக வறண்டுவிடும் சூழல் உண்டாகும். இதனால் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வர முதுமை வரை நன்கு கண் பார்வை கிடைக்கும். Sugar Patients Stress: மனஅழுத்தம் அதிகரித்தால் சர்க்கரை நோயும் அதிகரிக்கும் – காரணமும், தீர்வும்..!
கல்லீரலுக்கு நன்மை செய்யும் வெள்ளரிக்காய்: உடலில் இருக்கும் முக்கிய உறுப்பாகக் கருதப்படும் கல்லீரல், உணவில் இருக்கும் விஷத்தன்மையை முறிக்கும் குணம் கொண்டது. கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை ஊக்குவிக்க, அதில் இருக்கும் நச்சுத்தன்மையை அகற்றி வெளியேற்ற கல்லீரல் பலத்திற்கு வெள்ளரிக்காய் சாப்பிடலாம். உடல் எடை கொண்டவர்கள் உடல் எடையை குறைக்க, பசியுணர்வை கட்டுப்படுத்த, தோல் சுருக்கம் ஏற்பட்டுள்ளவர்கள் அது சார்ந்த பிரச்சனையை சரி செய்ய வெள்ளரிக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனை, கருப்பை சார்ந்த பிரச்சினைகளையும் குணப்படுத்த கட்டாயம் வெள்ளரிக்காயினை எடுத்துக்கொள்ள வேண்டும்.